37-புதிதாய் பிறந்தேன்

1K 40 0
                                    


அமேரிக்காவில் பெரிய பெரிய ஸ்டார் ஹாட்டேலில் எத்தனையோ தடவை சாப்பிட்டு இருக்கின்றாள். தாரிணி ஆனால் சிவாவோடு அவன் கெஸ்ட்டாக  ஸ்டார் ஹாட்டேல் சென்றவளுக்கு ஏனோ ஒரு அறியாமை வந்து விட்டது.... சிவாவின் முன்பு ஏனோ முதல் முறை பைவ் ஸ்டார் ஹாட்டேல் சென்றவள் போன்ற ஒரு நர்வஸ் அவளுக்குள்.

"ஸோ தாரிணி கல்யாணம்  பன்னிக்கிற ஐடியா இருக்கா..?" என்று சிவா திடீர் என்று கேட்கவும் கொஞ்சம் தடுமாறினாளும் தன்னை சுதாகரித்து கொண்ட தாரிணி "பார்ப்போம்" என்றாள். உடனே அவனும் அந்த கேள்வி கேட்க இது தான் காரணம் என்று நிரூபிக்கும் விதமாக "இல்ல படிக்கும் போது உங்க பேரன்ட்ஸ் பன்னத மட்டுமே மைன்ட் பன்னி கல்யாணம் பன்னிக்க மாட்டன்னு சொன்னல்ல... அதான் கேட்டேன்' என்றான்.

உடனே அவளும் "அவங்களே அவங்க லைப்ல ஒருத்தங்க போனதும் பெற்ற மகள் இருக்கான்னு நினைக்காம ஒரு முடிவு எடுக்கும் போது நான் ஏன் எனக்காக யோசிக்க கூடாது" என்று விட்டு அவனை நோக்கினாள்.

சிவாவுக்கு தாரிணியின் பேச்சு கொஞ்சம் சந்தோசத்தை தான் தந்தது ஆனாலும் எதுவுமே வெளிக்காட்டி கொள்ளாது "லவ் எதாவது பன்றீங்களா இல்ல ஐடியா இருக்கா?" என்று கேட்டான்.

தாரிணிக்கு சிவாவின் இந்த வித்தியாசமான கேள்விகள்  'ஷ்ருதி சொன்னது போல சிவாவவுக்கு நிஜமாகவே என் மேல் விருப்பமா' என்று தான் சிந்திக்க வைத்தது.

"லவ் எல்லாம் இல்ல அதோட இன்னார தான் கல்யாணம் பன்னிக்கனும் என்ற ஐடியாவும் இல்ல எதாவது ப்ரோபஸல் வந்தா பிடிச்சிருந்தா பார்ப்போம்" என்றாள்

"இப்பவே கல்யாணம் பன்னிக்குற ஐடியாவா?" என்று கேட்டதும் பதற்றத்தோடு "நோ நோ குறைந்தது வன் இயர்ஸாவது பழகனும் அதோட பழகும் போது அதிக மாற்று கருத்தோ இல்ல பேட் பிகேவியர்ஸோ பார்த்தா உடனே விலகிறுவேன் சும்மா அட்ஜஸ்ட்மன்ட் என்ற பெயர் பலங்காலத்து வாழ்க்கைய அழிச்சிக்க மாட்டேன்" என்றதும் சிவாவின் முகம் கொஞ்சம் மாறி தான் போனது உடனே அவன் "பேட் பிகேவியர்ன்னா எந்த மாதிரி?"

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Where stories live. Discover now