01-ஹீரோவின் வருகை

6.9K 93 5
                                    

சென்னை....
சென்னை என்றாளே மக்கள் கூட்டம் தான் வேலைக்கு வந்தோர் சினிமா வாய்ப்பு தேடி வந்தோர்.... பெரிய ஹாஸ்பிடல் தேடி வந்தோர் பெரிய பெரிய கடைகளில் பர்சஸ் பன்ன வந்தோர் என ஒரு நாளைக்கு கூட சென்னையில் சென்னையை பிறப்பிடமாக இருப்பவர்கள் மட்டுமே இருந்ததில்லை..... சென்னை ஒரு எதிர்பார்ப்புடைய மண் என்றே சொல்லலாம்  அதோடு வந்தோரை வாழ வைக்கும் சிங்கார சென்னை என்றும் சொல்லலாம் அப்படி பட்ட சென்னையை தினமும் தன் கைக்குள் வைத்திருப்பது யார் என்று பார்த்தால்  நிச்சயமாக அது பத்திரிகை..... தான்

அப்படி பட்ட பத்திரைகையை கைக்குள் வைத்திருப்பது ஒருவன் தானே கடைஷியில் பார்த்தால் சென்னை அவன் கையில் என்பதே அப்பட்டமான உண்மை

சென்னைக்கு வந்தவர்களை எல்லாம் திரும்பி பார்க்க வைப்பது  அந்த இருபது மாடி கட்டிடம் தான் அதை அன்னாந்து பார்க்காதோர் யாருமில்லை என்பதே உண்மை அத்தனை ப்ரம்மாண்டம் இந்தியா எங்கிலும் இப்படி பணத்தை வீசி கட்டி இருக்க மாட்டார்கள் என்றும் சொல்லலாம்.... சிலருக்கு "இந்த மாதிரி இடத்துல வேலை கிடைக்கிறதுலாம் வேற லெவல்ல" என்ற ஆசை

சிலருக்கு "என் பொண்ணு இங்க தான் வேலை பார்க்குது"
"என் பையன் இங்க தான்  வேலை பார்க்குறான்"  என்ற கர்வம்...
பலருடைய ஆசையை, கனவை எல்லாம் தன் போக்கேட்டில் சுருட்டி வைத்திருப்பவன் தான் அவன்  தமிழ்நாட்டையே சுருட்டி பாக்கேட்டில் வைத்திருக்கும் அவனுக்கு சிலரது கனவுகளை சுருட்டி வைப்பது ஒன்றும் அவ்வளவு கஷ்டமில்லை தான்

சென்னை எயார்போட்டிலிந்து இறங்கிய அவன் வெளியாகும் போதே கருப்பு ஷூட்டணிந்த பெரிய தடியன்கள் ஓடி வந்து அவனது கோர்ட்டை எடுத்து கொண்டனர் மற்றவன் அவனது வூட்கேர்ஸையும் எடுத்து கொள்ள தன் பொருட்கள் தன்னை விட்டு போன உணர்வு கூட இன்றி சிலை போன்று வந்து கொண்டு இருந்தான். காதுக்குள் நீல நிறம் எப்போதும் பத்தி கொண்டு தான் இருக்கும் வாயும் எதையாவது முனுமுனுத்து கொண்டே தான் இருக்கும்  அவன் ஒன்றும் ரசித்து ருசித்து பாடல் கேட்க்க பொப் போயல்ல...  அவன் சிடுசிடு என்றவன்  அவன் போன் பேசி கொண்டு இருக்கிறான் என்பது தான் உண்மை சத்தியம்....காதில் மொபைலை வைத்து பேசுவது கூட மான குறைவோ  என்னவோ பதினேட்டு மணி நேரமும் புலூடுத்  தான் அவன் காதில்

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Where stories live. Discover now