08-சக்தியே தாயாய்

1.6K 63 0
                                    

"இல்ல சார் ஷீ இஸ் நோட் ஒகே...." என்று விட்டு "அவ ரொம்ப நேரம் கழிச்சி என் கிட்ட வந்து உங்கள அம்மான்னு  கூப்டட்டுமா அக்கான்னு கேட்டுடா.... சார் நான் வேண்டாம்ன்னு சொல்லி அவ மனச நோகடிக்காம மழுப்பிட்டேன்... பட் இதோட இது முடியாது சார் அவ என் கூடவே இருந்ததால அவ சரியானதும் நான் போகும் போது என்ன விடுவான்னு எனக்கு தோன்றலை தயவு பன்னி எங்க இரண்டு பேர் வாழ்க்கையையும் கேள்விகுறி ஆக்கிறாம சீக்கிரமா அவளூக்கு அவங்க அம்மாவ எங்க இருந்தாளும் கூட்டி வந்து கொடுங்க உங்க பர்ஸனல் ப்ராப்ளம்ல தலை போட்ற விஷயமாகவே இருந்தாளும் சரி ப்ளீஸ்  சார்" என்று விட்டு மவுனமாக காத்திருந்தாள்.

"அம்மான்னு ஒருத்தி அவளுக்காக இருந்து இருந்தா நான் எப்டியாச்சும் கூட்டி வந்து இருப்பேன்.  பட் அவங்க அம்மா அவள பெற்றெடுக்கும் போதே இறந்தூட்டா... இப்போ நான் என்ன பன்றது என் தாராவுக்கு வேண்டியது எல்லாமே கொடுத்த நான் இவ்ளோ பெரிய விஷயத்துல கோட்டை விட்டுடேன்னு நினைக்கும் போது தான் கில்டியா இருக்கு" என்றான் மிக மிக உடைந்தவனாக, சிவா ஒரு கருடன் அவன் உடைந்து விடும் அளவு இது பெரிய விடயம் என்று அவளுக்கு தோன்றவே இல்லையே.... ஒரு திமிரு பிடித்த பணக்காரன் தாயை கூட வாங்கிடலாம் என்று தான் சொல்வான் என்றல்லவா நினைத்திருந்தாள்.  
இப்படி சுக்கு நூறாம் உடைவான் என்று எதிர்பார்க்கவே இல்லையே....

"சார் செகன்ட் மேரேஜ் பன்னிக்கிட்டா என்ன சார்.... தாராவுக்காக" இந்த தாராவுக்காக என்று சொல்லவில்லை என்றாள் நிச்சயம்  திட்டி விடுவான் என்று நினைத்து தான் தாராவினை இழுத்து விட்டாள். 

"ஒன்லி மதர் ஒப் தாராவா யாராவது இருப்பாங்களா?"

"என்ன முட்டாள்தனமான கேள்வி சார் இது உலகத்துல அவ்ளோத்தையும் வாங்கலாம்ன்னு சொல்ற நீங்க இப்டி சந்தேக பட்றீங்களே"

"வாங்களாம் தான் பட் இப்போ சந்தேகமாக இருக்கு" என்றதும் சிரித்து விட்டாள் சக்தி

"சார் நிறைய விதவையான பொண்ணுங்க இருப்பாங்க அவங்கள மாதிரி ஆளுங்க தான் சரியாகும்.... அதோட சீக்கிரமா எரேன்ஜ் பன்னுங்க சார் பிகோஸ் நான் போகும்  போது தாரா என்ன விட அவங்க கூட மிங்குல்  ஆகிறனும்" என்று கூறி விட்டு எழுந்து சென்று விட்டாள்.

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Where stories live. Discover now