09-தந்தையும் மகளும்

1.6K 56 0
                                    

"இல்ல தாரா உங்கம்மா பற்றி எனக்கு தெரியாது பட் நீ உங்கப்பா கிட்ட கேட்டுக்கோ அதான் சரி அதோட உன்ன இந்த ஏழு வருஷமாக தாய் இல்லை என்ற குறை இல்லாம வளர்த்தவர் உங்கப்பா நீ ஸடுனா போயி அம்மா வேண்டும்ன்னு கேட்டா அவர் என்ன யோசிப்பார 'என் தாராவுக்கு என் பாசம் மட்டுமே போதாதா'ன்னு கவலை படுவார்.... " என்றதுமே யோசனையோடு அமர்ந்திருந்த  தாரா  கொஞ்சம் நேரத்தில் தீர்மானமாக

"ஆமாக்கா அப்பா எனக்கு ரொம்ப பாசம் காட்டினார் பட் நான் தான்  அவர் கிட்ட போயி அம்மாவ கேட்டு ஹர்ட் பன்னிட்டேன் இனி எனக்கு அப்பாவே போதும் அம்மாலாம் வேண்டாம்" என்றாள் கொஞ்சம்  வீம்பாக

"அக்கா வேண்டாமா அப்போ"

"அம்மா தான் வேண்டாம்ன்னு சொன்னேன் நீங்க அக்கா இல்லயா அதனால கண்டிப்பா வேண்டும்" என்றதும் சக்தி அவளை முத்தமிட்டாள்

"அக்கா எங்கம்மா ரொம்ப அழகா இருக்காங்கல்ல?" என்று கேட்டு கொண்டே புகைபடத்தை தடவினாள் அந்த குழந்தை

"ஹம் உன் அம்மா உன்ன மாதிரி அதான் அழகு அதோட உனக்கு ஒரு ஸோங்க பாடி காமிக்கவா?" என்று கேட்டதும்

"பாட தெரியுமா?" என்று வித்தியசாமாக கேட்டாள் "ஹம்" என்று தலையாட்டியதும் பாடுங்க என்றாள் குழந்தை "ஆசை பட்டா எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா நீயும் அம்மாவ வாங்க முடியுமா.... ஆயிரம் உறவு உன்ன தேடி வந்து நின்னாளும் தாய் போலே ஆக முடியுமா..." என்ற வியாபாரி திரைப்படத்தின் பாடலை பாடி காட்டி விட்டு அர்த்தத்தையும் சொல்லி காட்டினாள் "ஹம்" என்று விட்டு சிரித்தாள் தாரா "ஏன் சிரிக்கிற?" என்று சக்தி கேட்டதும் "எனக்கு அம்மா வேண்டும்ன்னு நான் அப்பா கிட்ட கேட்டது தப்பு" என்று விட்டு மீண்டும் புன்னகைத்தாள் எதற்காக இந்த புன்னகை என்று கேட்டதும் புன்னகைத்து விட்டு ஓடினாள்

அதற்கு மேல் எதுவும் கேட்காது இருவரூம் விளையாட ஆரம்பித்தனர் நேரம் போனதே தெரியாது இருவரும் விளையாடி கொண்டு இருக்கும் போது   தான் சிவா அவர்களுக்கு அருகில் வந்தான் "அக்கா நான் இங்க இருக்கேன்" என்று கத்திய தாராவும் "அய்யோ தாரா எங்கடா இருக்க?" என்று கத்தி கொண்டே ஓடிய சக்தியையும் பார்த்திருந்தவன் தன் மனைவி இருந்து இருந்தாள் இங்கு நானும் சேர்ந்து விளையாடி இருப்பேன்.... என்ற நினைப்பு வந்ததும் தன் முகத்தை கைகளினால்  பற்றி ஒரு மூச்சை இழுத்து விட்டான்  தந்தையை பார்த்து விட்ட தாரா விளையாட்டை நிறுத்தாது
"டேடி என் பக்கத்துல வாங்க அக்கா எங்கள பிடிக்க வர்றாங்க" என்று கத்தி கொண்டே அவனை இழூத்தாள்  அவன் வந்து விட்டான் என்பதை உணர்ந்த சக்தி கண்ணில் கட்டியிருந்ததை கலட்டி விட்டு பொய்யாக "தாரா அக்காவுக்கு கால் வலிக்குது டா நாம நாளைக்கு விளையாடுவோம்....." என்றதும் தாராவும் ஓடி வந்து அவள் காலை பற்றி "எங்கக்கா வலிக்குது?" என்று கேட்டாள் உடனே அவளை நகர்த்தி விட்டு "உள்ள ஏதோ பன்னுது மா வா போலாம்" என்று கூறி கூட்டி செல்ல நினைக்கும் போது "நான் டேடி கூட வர்றேன் நீங்க போங்கக்கா" என்றதும் சக்தி வீட்டுக்குள் சென்று விட்டாள்

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Where stories live. Discover now