07-சிவாவும் சக்தியும்

1.7K 65 0
                                    

சக்தி அன்று விடியக்காலையே எழுந்து பத்திரிகை படித்து கொண்டிருந்தாள். அவளுக்கு எதிர் பக்கமுள்ள சோபாவில் வந்து அமர்ந்த சிவா டீ சாப்பிட்டு கொண்டிருந்தான். அசையாது சக்தி பேப்பர் படிப்பதை கண்டு "பத்திரிகைல வர்றதுல்லாம் நூற்றுக்கு நூறு உண்மையில்ல" என்று கூறவும் அவனை முறைத்து பார்த்து விட்டு "அச்சமில்லை பத்திரிகை எப்பவும் உண்மைக்கு முதலிடம் தரும் பத்திரிகை " என்றாள் கோவமாக

"அப்போ அச்சமில்லை பத்திரிகை பற்றி உனக்கு  மட்டும் தான் தெரியும்ங்கிறியா?"

"அப்டி சொல்லல பல வருஷங்களா அவங்க நிலைத்து நிற்க காரணம் அவங்களோட உண்மையும் உழைப்பும் தான் "

"ரொம்ப தெரிஞ்சு வெச்சிருக்கீங்க போல?" என்றான் நக்கலாக

"பின்ன அது என் கனவு கம்பேனி சார்.... அதோட  இன்டெர்னெஷனல் எவோர்ட்லாம் எடுத்து இருக்காங்க ஒரு எவோர்ட கொடுக்கும் போது எவ்ளோ பெஸ்ட்டுன்னு பார்ப்பாங்க பட் இது இன்டர்னெஷனல் லெவல்ல...." என்ற பெருமிதமாக பேசினாள் "அப்போ உங்களுக்கு அங்க வர்க் பன்ன ரொம்ப புடிக்குமா...?"

"ரொம்ப பிடிக்கும்" என்று மொட்டையாக சொன்னாள்

"அப்போ அன்னைக்கு நீங்க படிச்ச படிப்புக்கு ஒரு வேலைக்கான இன்ட்ரவியூ அங்க நடந்திச்சே அதுல ஏன் பாடிசிபேட் பன்னல?" என்று ஆர்வமாக கேட்டான்

"பன்னலாம்ன்னு தான் இருந்தேன் கடைஷில காலைல ஜாகிங் போனப்ப உங்கள பார்த்தேன் அதற்கு பிறகு வேலைக்கு போற வாய்ப்பு எனக்கு இருக்கலை சார்" என்றாள் கொஞ்சம் கவலையாக....

"ஓஹ்" என்று கூறினானே ஒழிய ஒரு நாசுக்காகவாவது சாரி என்று சொன்னானா கிறுக்கன்... என்று தனக்குள் அவனை திட்டி கொண்டாள்.

அதை உணர்ந்தவன் போன்று சக்தியை உற்று பார்த்து விட்டு "சாரி சொல்ல நான் ஒன்னும் உங்களை தூக்கிட்டு வரலைன்னு நினைக்கிறேன். தாரா மேல உள்ள அன்புல நீங்க வந்தீங்க பணத்தின் மேல இருந்த அவசியத்துல உங்கம்மா சம்மதிச்சாங்க" என்று விட்டு இன்னும் கூர்ந்து நோக்கி  "சாரி கேட்க்க அவசியம் இல்லைன்றத புரிஞ்சிகிட்டீங்க போல...." என்று விட்டு எழுந்து சென்று விட்டான்.

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Where stories live. Discover now