06-தாராவுக்கு ட்ரீட்மென்ட்

1.7K 69 0
                                    


கொஞ்சம் நேரம் ஆக ஆக அவள் தன்னை திடப்படுத்தி கொண்டு தாராவுடன் ஊரினை சுற்றி பார்த்தாள் "அக்கா அங்க போலாம்" என்று குழந்தைகள் விளையாடும் இடத்தை காட்டிய தாராவினை கூட்டி கொண்டு சென்று அந்த குழந்தைகள் விளையாடுவதை காட்டினாள். கொஞ்சம் நேரம்  இருவரும்  பார்த்து கொண்டு இருக்கும்  போதே அருகில் ஒரு பெண் வந்து தாராவுக்கு குடிக்க பால் பக்கேட்டு கொடுத்தாள் தாரா குழந்தை அல்லவா வாங்கி கொள்ள தான் செய்தாள். ஆனால் சக்தியோ "அய்யோ வேண்டாம்ங்க" என்று விட்டு தாராவின் கையில் இருப்பதை வாங்கி தாராவிடம் "இதுலாம் குடிக்க நல்லதோ இல்லயோ யாருக்கு தெரியும் நான் போயி சமீதா கிட்ட கேட்டுடு அப்பறமா வாங்கி தர்றேன் தாரா. இத இந்த ஆன்ட்டிக்கு கொடுப்போம் சரியா?" என்று கூறியதும் அந்த  பெண் "அய்யோ சக்தி அம்மா தாராவுக்கு பால்பக்கேட் கொடுத்துட்டு மாத்திரை கொடுக்க சொன்னது அய்யாவோட ஆடர்...." என்றதும் தாராவினை பார்த்தாள்.  தாரா வாங்கி குடிக்க ஆரம்பித்தாள் குடித்து முடிந்து மாத்திரையையும் சாப்பிட்டு விட "உனக்கு இவங்கள தெரியுமா தாரா?"

சிரித்து விட்டு "தெரியும் சென்னைல எங்கயாவது வெளிய போனா இவங்க தான் எனக்கு மருந்து சாப்ட கொடுப்பாங்க" என்றாள் ஏப்பம் ஒன்றை விட்ட படி உடனே "ஊரு முழுக்க ஆள் போட்டு வெச்சிருக்கானே மனுஷன் ஒரு சின்ன தப்பு பன்னா கூட நாம அம்போ தான் போலும்.... அப்பப்பா... என்று சலித்து விட்டு வானத்தை நோக்கி "கடவுளே தாராவ நீ தான் சரி பன்னனும் அவங்க அப்பாக்காகவாச்சும் நீ கண்டிப்பா சரி பன்னனும்...என்று வேண்டினாள்

ஐந்து நாட்கள் எப்படி பறந்தது என்றே தெரியவில்லை தாராவின் தந்தை வந்து திடுதிடுப்பென கண் முன் வந்து நிற்கவும் தான் ஐந்து நாள் ஆகியதையே உணர்ந்தாள்   "ஹாய்" என்று விட்டு நகர்ந்த அவனை பின்னாடியிருந்து அழைத்தாள்.  என்ன என்று திரும்பி கேட்டவனது கண்களை ஒரு தடவை பார்த்து விட்டு "அம்மா சொன்னாங்க கொடுத்த வாக்க காப்பாற்றிட்டீங்கன்னு ரொம்ப நன்றி" என்றாள்.
உடனே "நன்றி சொல்ல நான் எதையும் யாருக்கு இலவசமா கொடுக்கலை.... எல்லாமே ஒரு டீலிங் தான் அதோட தாராவ ரெடி பன்னி கூட்டி வாங்க" என்று விட்டு அறைக்குள் சென்று விட...  சக்தியும் தாராவினை தயார் படுத்தி அழைத்து கொண்டு வாசலில் அமர்ந்திருந்தனர் திடீர் என்று ஒரு ஹெலிகப்டர் சத்தம் காதருகே கேட்க்க சக்தியும் தாராவும் ஓடி சென்று வெளியே எட்டி பார்த்தனர் உடனே "சொப்பர் வந்துறுச்சி அப்பா வாங்க போலாம்" என்று கத்தினாள் மகள் தாரா. அதிர்ச்சியோடும் ஆசையோடும் ஹெலிகப்டரை பார்த்து கொண்டிருந்த சக்தி தன்னை சுதாகரித்து கொண்டு தாரா போன திசையை நோக்கினாள்.  கம்பீரமான தோற்றத்தில் ஸ்டைலாக நடந்து வந்து கொண்டு இருந்தான் அவன்....

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Where stories live. Discover now