29-சில சந்திப்பு

988 40 0
                                    

"ஹாய் தாரனி" என்று தான் ஆரம்பித்தாள் ஷ்ருதி "ஹேய் வாவ் வட்ட பியூடிபுல்" என்று கூறி ஹங் செய்து விட்டு "இப்போ தான் புரியுது சிவா ஏன் இப்டி விழுந்து கிடக்கான்னு" என்று கூறி ஷ்ருதியை விட்டு பிரிந்தாள்.

வாங்க என்று அழைத்து சென்று அமர வைத்து பேசி கொண்டு இருந்தனர். "அப்பறம் ஷ்ருதி டின்னர்லாம் முடிச்சிட்டீங்க   ஸோ எங்க வீட்ல என்ன சாப்ட்ரீங்க?" என்று கேட்டதும் "வாட்டர் குடுங்க அது போதும்" என்றாள் ஷ்ருதி அதோடு நீரை கொடுத்து பேசி கொண்டு இருந்தனர் பின்பு அவர்கள் சென்றதும் உறங்கி விட்டாள்....

அடுத்த நாள் காலை தன்னவள் இந்தியா செல்கிறாள் என்பதால் தங்கைக்கு சாக்லேட் கொஞ்சம் கொடுத்து அனுப்பினான் 

_______________

ஒரு நாள் மாலையில் ஒரு ப்ராஜெக்ட்க்காக தன் மூளையை கசக்கி கொண்டு இருந்தான் சிவா
திடீர் என்று ஷ்ருதியிடம் ஐடியா கேட்ப்போம் என்று தொலைபேசியில் அழைத்தாள். ஷ்ருதியின் தந்தை பிஸினஸ் மேன் தானே அவரிடம் இருந்து டிப் வாங்களாம் என்று தான் அழைத்தான்
ஆனால் பத்து முறை அழைத்தும் அவளை தொடர்புகொள்ள முடியாது போகவும் முயற்ச்சியை கை  விட்டு விட்டு தன் வேலையை கவனித்தான்.
அன்று ஷ்ருதி அமேரிக்கா வந்து சென்று ஒரு மாதம் ஆகி இருந்தது. அப்போதூ தாரணி அவ்விடம் வந்து விட்டு அவன் பிஸியாக இருப்பதால் அவனை டிஸ்டப்  செய்யாமல் சென்று விட்டாள். அவள் வந்ததோ சென்றதோ அவனுக்கு தெரியாது.

அடுத்த நாள் அழைத்ததும் ஷ்ருதி ஆன்ஸ்வர் செய்தாள் "ஹேய் நேற்று என்ன டா ஆன்ஸ்வரே இல்ல மிஸியா?"

"சேசே பிஸிலாமில்ல தங்கச்சி மொபைல புடிங்கிட்டு போயி காணாம பன்னிட்டா அதான்  சிவா.   இன்னைக்கு தான்  தேடி எடுத்தேன்" என்றதும் தான் அவனுக்கு கொஞ்சம் திருப்தியே "சரி சரி சாப்டியா.... எக்ஸேம்ன்னு சொன்ன முடிஞ்சிறுச்சா?"

"ஆமா சிவா எக்ஸேம் முடிஞ்சிறுச்சி  உன் ப்ராஜெக்ட் எப்டி?"

"அதுவா... பன்னி இருக்கேன் இன்னைக்கு காலைல தான் ஹேன்ட் ஓவர் பன்னேன்"

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Where stories live. Discover now