13-கண்ணீரில் சக்தி

1.5K 58 1
                                    

"இவ்ளோ நடந்து இருக்கு அம்மா இதை பற்றி பேசவே இல்லயே ரம்யா" என்று விம்மலோடு கேட்டாள்  சக்தி
"நீ முதல்ல அழுதுறு சக்தி பெரிய தியாகி மாதிரி சிலையாட்டம் நிக்காத என்ன"

"நீ சொல்லிட்ட பட் நான் முழுசா நம்பலை ரம்யா  யேன்னா ஒரு வேலை நீ பொய் சொல்லி நான் அத நம்பி வேற மாதிரி முடிவு எடுத்தா நான் தமிழ்க்கு பன்ற துரோகம் மாதிரி ஆயிறும்ல....ஸோ நான் தமிழ்கிட்டவே கேட்க்கனும்...." என்று விட்டு பதற்றத்தோடு மொபைலை எடுத்து கால் செய்தாள் ஆனால் அந்த நம்பர் வர்க் செய்யவே இல்லை "நாங்க பொய் சொல்லி பிரிக்க நீ ஒன்னும் அம்பானி பையன காதலிக்கலை மூன்று வேலை சாப்பாட்டுக்கே வீடு வீடா வேலைக்கு போறதயே பரம்பறை பரம்பறையா தொழிலா வெச்சிருக்குற ஒரு குடும்பத்து பையன தான் காதலிச்ச அது ஞாபகம் இருக்கட்டும்...." என்றாள் ரம்யா கோவமாக.....

"சரி தான் ரம்யா பட் ஒரு வேலை எங்கம்மா என்ன நல்ல இடத்துல கல்யாணம் பன்னி கொடுக்கனும்ன்னு உன்கிட்ட பொய் சொல்ல சொல்லி கூட இருக்கலாம்ல... எதுவேனா இருக்கட்டும்  ரம்யா பட்  நான் அவன ஸ்கூல் டைம்ல இரூந்து காதலிச்சி இருக்கேன் நம்பி இருக்கேன் ஸோ அவனே சொல்லட்டும் அதான் எனக்கு பைனல் ப்ளீஸ் டா... என் மனச மாத்தாத" என்று கூறி விடவும்
"சரி நீ அவன் கிட்டயே கேட்டு தெரிஞ்சுக்க அதுல எங்களுக்கு ப்ராப்ளமில்ல...  ஆனால் ஆன்ட்டிய தயவு பன்னி கஷ்டப்படுத்தாத... உங்கப்பா போனதால ரொம்ப உடைஞ்சிட்டாங்க பொண்ணூங்க கிட்ட கவலை பட முடியாம இருக்காங்க தயவு பன்னி நீயும் கஷ்டப்பட்டு அவங்களையும் கஷ்டபடுத்திடாத"

தலையை ஆட்டி விட்டவள் "அவன் அமெரிக்கா தானே போனான் அங்க தானா இப்பவும்"

"ஹம் ஆமா வட இந்தியா குடும்பம் ஒன்னு முப்பது வருடத்திற்கு முன்னாடி அமைரிக்கால செடுல் ஆகி இருக்கு அவங்க வீட்ல ட்ரைவிங் வேலை பார்த்துட்டு இருந்தவன் தான் தமிழ்   அந்த பொண்ணுக்கு இந்தியா ஆள தான் கட்டிக்கனும்  என்ற ஆசையாம் அதற்கு அப்பறமா நடந்தத நான் சொல்டேன்" என்று தன் பேச்சை முடித்து கொண்டாள் 

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Where stories live. Discover now