கதிரின் வைரம்

249 37 11
                                    

🔱யின்
♥️கதிர் வேலனின் வைரம் முல்லை ♥️

Épisode 18

மறுநாள் காலை கதிரும்,முல்லையும் தனது வீட்டுக்கு கிளம்பி
கொண்டு இருந்தார்கள்.

பார்வதி: இந்தா முல்லை

முல்லை: என்ன அம்மா இது

பார்வதி: இதுல ரவை லட்டு இருக்கு வீட்டுக்கு கொண்டு போ

முருகன்: இந்தா மா இதுல முடக்கதான் கீரை இருக்கு அக்காவுக்கு
சமையல் செய்யும் போது இதை சேர்த்து செய்து குடுங்க ரொம்ப நல்லது

கதிரும் முல்லையும் கிளம்பினார்கள்.
பார்வதி ,முருகன் அவர்களை மனநிறைவோடு வழி அனுப்பிவைத்தனர்.
வண்டியில் போகும் போது கதிர் முல்லை யிடம் உங்க அப்பா நல்லவரு தான் இல்ல என்றார்.

முல்லை: என்ன புதுசா

கதிர்: இல்ல அம்மாவை நம்ம நல்லா தான் பார்த்து கொள்கிறோம்.
ஆனா நமக்கு பிடித்தவர்கள் மீது நாம் காட்டும் அன்பே அவர்கள் அடுத்த கட்டத்துக்கு நகர முடியாமல் போகிறது

முல்லை: என்ன சொல்றீங்க,எனக்கு புரியல

கதிர் : இல்ல முல்லை அண்ணிக்கு யாராவ்து குழந்தை இல்லைன்னு
சொன்னால் ,நாங்க மூணுப்பேரும் தான் இருக்கிறோமே என்று
சொன்னோம். ஆனா அண்ணிக்கு குழந்தை முக்கியம் என்று நாங்க
நினைக்கல. அம்மாவுக்கு கூட பாரு ,நம்ம ஒருவரை மாற்றி ஒருவர்
அவர்களை நல்லா பார்த்துக் கொள்கிறோம், அதுனால தான் அவர்களும் நடக்க கூடும் என்பதையே மறந்துவிட்டோம். நம்ம பாசம் காட்டுவது அக்கறை காட்டுவது இது எல்லாமே நல்லது தான், அனா அது அவர்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகணுமே தவிற,அதே இடத்தில் நிக்க வைக்க நம் பாசமே இடையுறா இருக்க கூடாது.

முல்லை: அப்படி பண்ணா நம்ம மாறிட்டோம்ன்னு நினைக்க
மாட்டங்களா?

கதிர்: நல்ல மாற்றம் நன்மைக்கு தானே.

முல்லை: அப்ப நானும் மாற போறேன்.

கதிர்:ஐயோ என்னவா மாற போற,,,,மறுபடியும் முதல்ல இருந்த தா...

முல்லை: இல்லங்க இனி நானும் உங்களை மாமான்னு தான் கூப்பிட
போறேன்.

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now