என் பொக்கிஷத்தை இழக்க மாட்டேன்.

139 25 4
                                    

பாகம் 33

புதன் கிழமை விடியல் காலை மணி 3.00
கதிருடன் சண்டையிட்டு வீட்டை விட்டுப் போகும் முல்லையை

முல்லை நில்லு போகாதே,போகாதே....என்று அழைத்த படி கதிர் கத்த...அவர் அருகில் உறங்கி கொண்டு இருந்த முல்லை, பதறி எழுந்தவள்

முல்லை: ஏங்க....என்ன ஆச்சு ஏன் இப்படி கத்துறிங்கள்....எதாவது
கெட்ட கனவா ?

கதிர் துடி துடித்து ஏழுந்து முல்லை கைகளை பிடித்து கொண்டு
என்னை மன்னித்துவிடு என்று உலற,

முல்லைக்கு ஒன்றுமே புரியவில்லை...

முல்லை : இந்தாங்க தண்ணிக்குடிங்க எதோ கனவு கண்டு
இருக்கீங்க என்று நினைக்கிறேன்.

கதிர் : ஆமாம் முல்லை கெட்ட கனவு தான் ,இது கனவாக இருப்பது தான் நமக்கு நல்லது.

முல்லை: என்ன என்னென்னமோ பேசுறீங்க நீங்க முதல்ல

தண்ணி குடித்துட்டு படுங்க, முல்லை கதிரை அரவணைத்து படுக்க
வைத்தாள் , தாய் நம்மை விட்டு போகக்கூடாது என்று ஒரு பிள்ளை தன் தாயின் புடவை முந்தியை பிடித்து உறங்குவது போல, கதிரும்முல்லையின் கைகளை பிடித்து கொண்டு துங்கினார்,

நேரம் காலை 5மணி ஆனது கதிருக்கு தூக்கம் வரவில்லை,முல்லை
அசதியாக உறங்கி கொண்டு இருந்தாள்.
கதிர் சத்தம் போடாமல் எழுந்து வெளியே சென்றார், நேராக வீட்டுக்கு வெளியே சென்று வீட்டின் அருகே உள்ள கோவில் தெப்பக்குளத்தில் 3முக்குமுக்கி எழுந்தார் ஈறதுணி யோடு கோவிலை சுற்றி விட்டு கடவுளிடம்,

கதிர் : கடவுளே நேற்று நான் கண்ட கனவு, என் வாழ்வில் என்றுமேநடக்க கூடாது. நான் இனி சாகும் வரை என்னை தேடி வந்த என் பொக்கிஷத்தை இழக்க மாட்டேன். இது வரை நான் எனக்கு என்று எதுவுமே உன்னிடம் கேட்டது இல்லை, இப்போ நான் உன்னிடம் கேட்பதெல்லாம் நான் ஏத்தனை ஜென்மம் எடுத்தாலும் என் முல்லை தான் எனக்கு துணையாக வர வேண்டும். அவள் என் அருகில் இருந்தால்,நான் என்றுமே சந்தோஷமாக இருப்பேன். அதே போல இனி அவளுக்குள் இருக்கும் திறமையை என் வீட்டுக்குள் அடைத்து வைக்கமால், அவளின் திறமை, அவளின் கனவு அனைத்தையும் ,அவள் ஆசை பட்டது போல அமைய , நான் உதவியாக இருக்க வேண்டும், இது அனைத்துக்கும் நீங்கள் தான் எனக்கு துணை இருக்க வேண்டும் முருகா....என்று வேண்டிக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினார்.

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now