GPS

148 22 0
                                    


பாகம் 44

செவ்வாய் கிழமை காலை 8. மணி அளவில்
(மூர்த்தி கடைக்கு சரக்கு விஷய்யமாக வெளியூர் செல்கிறார்).

மூர்த்தி : சரி தனம் நான் கிளம்புகிறேன் ,
எப்படியும் நான் வர இரவு ஆகிவிடும், நீங்க பார்த்து பத்திரமா
இருங்க,

மீனாவின் போன் மணி அடித்தது.

மீனா : யாரு இது காலையிலே...,அப்பா...சொல்லுங்க அப்பா...

ஜனார்தன் : அம்மாடி மீனா ,நல்லா இருக்கியா... இன்னைக்கு நம்ம
பண்ணைக்கு சரக்கு ஏற்றுமதி பண்ணற விஷயமா ஆளுங்க வறாங்க, அப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லை ,நீ மாப்பிள்ளை கிட்ட சொல்லி கொஞ்சம் என் சார்பில் போய் கணக்கு பார்த்து கொடுத்துட்டு வர சொல்றியா...

மீனா : ஐயோ அப்பா...உங்களுக்கு என்ன உடம்புக்கு...

ஜனா: ஒண்ணும் இல்ல மா கொஞ்சம் நெஞ்சு வலிக்குது,dr. வந்து
பார்த்துட்டு ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காங்க...
உங்களுக்கு எதுவும் தொந்தரவு இல்லை என்றால் ரெண்டு பேரும் இங்கே வந்து ரெண்டு அல்லது மூனு நாள் தங்கிட்டு போங்க அம்மாடி, எனக்கும் ஒரு மாதிரி நல்லா இருக்கும்...

மீனா :அப்பா நீங்க ஒன்னும் கவலை படாதிங்க நான் ஜீவாவை கூட்டிட்டு உடனே வரேன், அவன் வந்து எல்லாத்தையும் பார்த்துபான்....

ஜீவா கதிர் கண்ணன் லக்ஷ்மி தனம் முல்லை அனைவரும் காலை தேநீர் குடித்துக்கொண்டு இருந்தனர்.

மீனா:ஜீவா. ....வா...வா....உடனே கிளம்பலாம்..

ஜீவா : எங்கடி.... ஏன் இப்படி கத்துற .....

லக்ஷ்மி : வயிற்றில் பிள்ளைய வைத்துக்கொண்டு இப்படி ஒடியரதன்னு ஏத்தனை முறை சொல்றது .

மீனா : எங்க அப்பாக்கு உடம்பு சரியில்லையா...நம்மல உடனே
பார்க்கணுமா கார் அனுபிரேன்னு சொன்னாரு..

ஜீவா : உடம்பு சரி இல்லைனா,dr. வர சொல்லணும். நான் நீ
போய் என்ன பண்ண போறோம்.

மீனா : டாய் என்ன விளையடுறியா.. நானே எங்க அப்பாக்கு நெஞ்சு வலி என்னை பார்க்கனும்னு சொல்றாரு என்று சொல்கிறேன் ,நீ என்னமோ இங்கே உக்காந்துக்கிட்டு கதை கேட்டுகிட்டு இருக்க...ஒழுங்கு மரியாதையா .. கிளம்பு...

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now