நடுவில் கொஞ்சம் 5 வருட பக்கத்தை காணோம்..

97 13 2
                                    


((நடுவில் கொஞ்சம் 5 வருட பக்கத்தை காணோம்.))

மதிய வேளை தனது அறையில் முல்லை உறங்கிக் கொண்டு இருக்க ....

முல்லையின் கைபேசியின் இசை கேட்டு... கைபேசியை எடுத்த அவள்...

மறுமுனையில் சாக்ஷி...

முல்லை : சொல்லு டி... எப்படி இருக்கிற.?

சாக்ஷி : சிறிது நேரம் மௌனம்

முல்லை : ஏய் ..என்னடி போன் பண்ணிட்டு பேசாம இருக்கிற...

சாக்ஷி : (கவலையான குரலோடு )..நான் உன்னையும்.. கதிர் மாமாவையும்...

பார்க்க வேண்டும் ..உன் வீட்டிற்கு வரவா?

முல்லை : இது என்ன...டி.. கேள்வி ...இந்த வீட்டிற்கும்.. நீ மருமகள்தான்

...உனக்கு இங்கு வர எல்லா உரிமையும் இருக்கிறது ...எப்பொழுது

வருகிறாய் ...

சாக்ஷி : முல்லை உங்களிடம் நான் தனியாக பேச வேண்டும்.. நான் இன்று

மாலை உன் வீட்டிற்கு வருகிறேன் ...

முல்லை : சரி வா வீட்டிலும் யாரும் இல்லை ...மீனாவின் அம்மா அவளை

அவள் வீட்டிற்கு ஒரு வாரம் அழைத்துக்கொண்டு போய் வருகிறேன் என்று

சென்றிருக்கிறார்கள்....

தனம் அக்காவையும்.. அத்தையையும் ...மூர்த்தி மாமா டாக்டரிடம்

அழைத்து சென்று இருக்கிறார் ....நான் மட்டும்தான் வீட்டில் இருக்கிறேன்

...எனக்கு துணையாக... கண்ணன் இருக்கிறான்...நீ கிளம்பி வா .

சாக்ஷி : சரி...டி நான்.நேரில்... வருகிறேன்...

மறுபக்கம்...

கதிர் கடையில் அமர்ந்து கொண்டு தன் பன்னிரெண்டாம் வகுப்பு...

தேர்வுக்கான பாடங்களைப் படித்துக் கொண்டு இருக்க ....கதிரின் கைபேசி

மணி இசைக்க...

கதிர் : என்ன மாப்பிள எப்படி இருக்கிற...

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now