💚 இணை 2

1.1K 45 6
                                    

"இன்னுங்கொஞ்சம் நீ இன்னாத்த பேசப் போறன்னு எங்களுக்குத் தெரியாதா பாஸூ? நான் யாரு இன்னா எப்டின்னு ஒனக்கு நல்லாத் தெரியும்! அப்பாலிக்கா நீ வூட்ல இல்லாதசொல நா அத இத லவட்டிக்கினு போயிட்டேனு எம்மேல இல்லாத பொல்லாதத
சொல்லி என்னைய நீயி மறுபடியும் ஹோமுக்கு இட்டுக்கினு பூட மாட்டியே?" என்று அவரிடம் கேட்டபடி சந்தேகமாக அவரைப் பார்த்தான் வாகை செல்வன்.

"அதச் செய்றதா இருந்தா நான் உன்னை கேஸ்ல இருந்து ரீலீவ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருக்கவே தேவையில்லயேடா தம்பி? நான் இருக்குற வீட்டோட நிலைமை உனக்கு நல்லா தெரியணும்ங்குறதுக்காக தான் உன்னைய ஒருவாரம் எங்கூட  கூட்டிட்டு வந்தேன். பட் நீ எங்க வீட்ல இருக்கறதா இருந்தா, என் மாமனார், மாமியார் ரெண்டு பேருட்டயும் உன் அத்தாரடேட்டிவ் ஆட்டிடியூட காட்டணும்! பவிய பத்திரமா பார்த்துக்கணும். அவளோட தாத்தா, பாட்டியோட extortion ல இருந்து அவள காப்பாத்தணும். அவ Focused ஆ படிக்குறதுக்கு உன்னால ஆன ஹெல்ப நீ அவளுக்கு செஞ்சு குடுக்கணும்! சொல்லு செல்வா..... இந்த வீட்ல ஒன் இயர் இருக்குறதுக்கு உனக்கு சம்மதமா? இந்த ஒன் இயர் பீரியட நீ ஒழுங்கா கம்ப்ளீட் பண்ணினன்னா உனக்கு நான் ரெண்டு லட்சம் பணம் தருவேன்; அந்த பணம் போக உனக்கு ஒரு மாச சேலரி டென் தவுசண்ட்! இந்த பத்தாயிர ரூபாயில நீ உன்னோட சாப்பாடு, பவியோட சாப்பாடு, பவியோட சின்ன சின்ன தேவைங்க இது எல்லாத்தையும் கவனிச்சுக்கணும். ஒருவருஷம் முடிஞ்சு நீ எங்க வீட்ல இருந்து வெளிய போயி உன்னால முடிஞ்ச ஹோட்டலோ, ரோட்டுக்கடையோ எதையாவது ஒண்ண செட் பண்ணி அந்த ஷாப்புக்கு முதலாளி ஆகிட வேண்டியதுதான்!" என்று அவனிடம் சொன்னார் சபாபதி.

"நீ சொல்றதெல்லாம் கரீட்டு தான்பா! ஆனா இத்த ஏன் நான் செய்யணும்? அந்த பாப்பாவோட இஸ்கூல்ல அதுக்கு தெரிஞ்ச நல்ல பய எவனையாவது அத பத்திரமா பார்த்துக்கனு சொன்னா முடிஞ்சது!
அதா நீ துட்டு கூட தர்றேன்னு சொல்றியே? பின்ன எவன் வர மாட்டான் இந்த வேலைக்கு?" என்று தனக்கு இலவச ஆலோசனை சொன்னவனை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தார் சபாபதி.

இளையவளோ என் இணை இவளோ✔Where stories live. Discover now