💚 இணை 9

804 53 16
                                    

ஞாயிறு மாலை தன் மகளுடன் நன்றாக நேரம் செலவழித்து,  அவளுடைய தோழிக்கு நல்லதாக ஒரு பிறந்தநாள் பரிசும் வாங்கிக் கொடுத்த சபாபதி தன்னுடைய வேலைக்கு கிளம்பிச் செல்லும் முன் சாம்பவியிடம் நிறைய கட்டளைகளை இட்டுச் சென்றார்.

அவளும் தந்தையின் பேச்சுக்கு மறுப்பேதும் சொல்லாமல் அவர் தன்னிடம் சொன்ன விஷயங்களுக்கு எல்லாம் பெரிதாக தலையை ஆட்டி வைத்திருந்தாள்.

புதன்கிழமை காலையில் பரபரப்பாக குளியலுக்கு தயாராகி  சரும ஈரப்பதத்திற்கான அவளது பாடி ஜெல், உப்பு, மற்றும் சர்க்கரை கலந்த ஸ்க்ரப்பிங்கை அவள் செய்து கொண்டிருந்த போது அவளது அறைக்கதவின் வெளியே
வந்து நின்றவன் அறைக்கதவை மெதுவாக தட்டினான்.

"என்ன செல்வா.....?" என்று கேட்டவளிடம்,

"ஏம்மே.... வந்துனுருக்குது நாந்தான்னு ஒனக்கு எப்டித்தெரியும்?" என்று ஆச்சரியமாக கேட்டான்.

"அதெல்லாம் எங்களுக்கு தெரியும்! என்னைய நீ இப்ப டிஸ்டர்ப் பண்ணாத; எனக்கு டைமாச்சு; சீக்கிரமா போய் பால இப்பவே கலந்து வை. அப்பத்தான் நான் குளிச்சுட்டு வர்றதுக்குள்ள அது வார்ம் ஆகியிருக்கும்!" என்று சொன்னவளிடம்,

"சரி.... சரி! காலுல வெந்நிய கொட்டுனாப்ல எப்போ பாரு உனக்கு அவசரம்..... கதவுக்கு வெளிய டேபிள்ல புத்சா யூனிஃபார்ம் வச்ருக்கேன்! நீ கதவ தொறக்கசொல இத்த எடுத்துப் போட்டுக்கடா கண்ணு! நான் கீழ போறேன்!" என்று சொல்லி விட்டு படிகளில் இறங்கிக் கொண்டிருந்தான் செல்வா.

கன்னத்தைத் தேய்த்துக் கொண்டிருந்த சாம்பவியின் கைகள் அவனது பேச்சில் இரண்டு நொடிகள் அப்படியே நின்றது.

"யாருடா நீ? எதுக்காகடா இந்த வீட்டுக்கு வந்த? ஐ லைக் யூ ஸோ மச் குட் நேச்சர்டு இடியட்!" என்று அவளுக்குள்ளாக சொல்லிக் கொண்டு விரைந்து குளியலை முடித்து புது சீருடை அணிந்து, தலை வாரி புறப்பட்டு கீழே வந்தாள்.

"ஒன்னிய எத்தினி மணிக்கு ஸ்கூலுக்கு கூப்ட வரட்டுங்கண்ணு? இன்னிக்கு நாம ஒன் ப்ரெண்டு ஊட்டாண்ட பார்டிக்கு வேற போகணுங்காட்டியும் கொஞ்சம் சுருக்கா இஸ்கூல்ல இருந்து வந்துக்கலாம்ல நீ?!" என்று சொன்னவனை முறைத்தவள்,

இளையவளோ என் இணை இவளோ✔Where stories live. Discover now