💚 இணை 30

751 49 5
                                    

சபாபதி செல்வாவை ஒரு மூன்று நட்சத்திர ஹோட்டலுக்கு விருந்துக்கு அழைத்து வந்திருந்தார். இன்று அவன் கிளம்புவதாக அவனே அனைவரிடமும் சொல்லியிருந்தான். ரேணுகா தான் வீட்டிற்கு வந்த ஒருவாரத்தில் இவன் கிளம்புகிறேன் என்று சொல்கிறானே என்ற கவலையில் அமர்ந்திருந்தார். இந்த ஒரு வாரத்தில் பவி அவரிடம் அவர் கேட்ட கேள்விக்கு ஒற்றை வார்த்தையில் பதிலளிக்கும் வரை முன்னேறி இருந்தாள். தன்னுடைய அம்மம்மாவைப் போல் நினைத்த பொழுது பாசம் வரும், நினைத்த பொழுது போய்விடும் என்ற விதத்தில் இல்லாமல் ரேணுகாவின் அன்பு எப்போதும் ஒரேமாதிரியாக பவிக்கு கிடைத்தது.

அவளே ஓடி ஓடி அவளது அறைக்குள் ஒதுங்கினாலும் ரேணுகா சலிக்காமல் அவளது அறைக்கதவை தட்டி தட்டி அவளை வெளியே இழுத்து வைத்துப் பேசிவிட்டு தான் சென்றார். ஒரு பெண்ணின் கைநேர்த்தியால் குடியிருக்கும் வீடு எவ்வளவு அழகாக இருக்கும் என்பதை தன் செயலில் காட்டினார்.

சாம்பவியால் தான் ரேணுவிடம் கலந்து உறவாட முடியவில்லை. ஆனால் செல்வாவோ அந்த பெண்மணியின் இருப்பை மிகவும் நன்றாக அனுபவித்தான்.

"அட இங்க குடு யம்மா! நான் வெட்டித்தரேன்!" என்று அவர் கையிலிருந்து கத்தியை பிடுங்குவதாகட்டும், வெட்டிப்போட்ட காய்கறி துண்டுகளை இடக்கையால் எடுத்து வாயில் போட்டுக் கொண்டு ரேணுவிடம் தலையில் குட்டு வாங்குவதாக இருக்கட்டும்..... இது எல்லாமே ஹைக்கூ கவிதை போல் ஷார்ட் அண்ட் ஸ்வீட் ரகமாக இருந்தது சாம்பவிக்கு.

பள்ளிக்கு செல்லும் வழியில் அவனிடம், "ஏய்.... என்னடா! நானும் பாத்துட்டே இருக்கேன்; நீ அந்த லேடிட்ட ரொம்ப க்ளோஸ் ஆகுற?" என்று மூக்கை தூக்கிக் கொண்டு கேட்டவளிடம்,

"ம்ப்ச் ஒன்னையமேரி பெத்தது ஒண்ணு, பாத்து பாத்து வளக்கப்போறது ஒண்ணுங்குற யோகமெல்லாம் நமக்கு கெடைக்குமா பாப்பா? கெடைக்குற நேரம் வரைக்கும் அத அனுபவிச்சுக்க வேண்டியதுதான்......!" என்று சொன்னவன் தான் அவளிடம் இன்னும் நான்கு நாட்களில் தான் அவள் வீட்டிலிருந்து கிளம்பி செல்லப் போவதாக அவளிடம் சொல்லி விட்டான்.

இளையவளோ என் இணை இவளோ✔Donde viven las historias. Descúbrelo ahora