💚 இணை 39

1.2K 63 29
                                    

"எஞ்செல்ல மைமா!" என்று அவள் கன்னம் பற்றிக் கொஞ்சியவன்,

"இங்க வோணாம்! நம்ம லவ் பண்றத பார்த்து இந்தப் பொண்டு பொடுசகளெல்லாம் கெட்டுப் போயிடக் கூடாது. நீ மேல வா; இன்னிக்கு நம்ம ஜாகைக்கு லீவ் உட்டுக்குனு அந்த ரெண்டு தடியனுங்களையும் வூட்டுக்கு அனுப்பி வச்சுட்டேன். இனி செல்வா காட்டுல மழதான்!" என்று குதூகலித்தவனிடம்,

"ஹலோ மிஸ்டர் ஒலக்க..... உங்காட்டுல மழ பெய்றதெல்லாம் சரிதான்; நம்ம தங்குறதுக்கு வீடு எங்க?" என்று கேட்டாள் சாம்பவி.

"நம்ம தங்குறதுக்கு இன்னாத்துக்கு தனியா ஒரு வூடு.....? அதான் நீ ஒங்க அம்மாவாண்ட டெய்லி போயி கட்டிப்புடிச்சினு இருக்கணுன்ற; பகல்ல அத்தைய கட்டிப் புடிச்க்க! ராத்ரி ஒம்மாமன கட்டிப் புடிச்க்க; ஒங்க வூட்ல மாடியில நாம இருந்துக்கினு அதுக்கு மாசாமாசம் ரூல்ஸூக்கு துட்டு குடுத்துக்கினா போச்சு! இன்னான்ற?" என்று கேட்டவனின் பேச்சில் தன் தலையில் அடித்துக் கொண்டு,

"உங்கிட்ட போய் நான் வீடு கேட்டேன் பாரு! என்னை சொல்லணும்! பட் நீ சொல்ற ஐடியாவும் நல்லாத்தான் இருக்கு! பட் மாமனார் வீட்ல வந்து தங்குறதுக்கு ஒனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே?" என்று கேட்டவளிடம்,

"நோ ப்ராப்ளம் மை டியர் ஜஸ்ட் பார்ன் பொண்டாட்டி!" என்று கண்சிமிட்டினான் செல்வா.

"டேய்.... யாருடா ஒனக்கு பொண்டாட்டி? லவ்வுக்கு ஓகே சொன்னா உடனே பொண்டாட்டிம்பியா?" என்று கேட்டவளிடம் குறுஞ்சிரிப்புடன்,

"மாமனார் வீட்ல வந்து தங்குறதுக்கு ஒனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லையேன்னு கேட்ட கஸ்மாலத்த பொண்டாட்டின்னு கூப்டாம என்னன்னு கூப்ட முடியும் மிஸஸ் செல்வா?" என்று அவன் அவளிடம் கேட்க பவி லேசான சிரிப்புடன் தன்னவனை அணைத்துக் கொண்டு அவன் மார்பில் தன் மூக்கை தேய்த்துக் கொண்டாள்.

அது தனக்கான மறைமுக அழைப்போ என்னவோ என்று நினைத்தவன் மிக மிருதுவாக பவியின் கன்னம், மூக்கு, கண்கள், காது, கழுத்து அனைத்திலும் முத்தம் பதித்து கடைசியில் அவள் இதழ்களில் தன் இதழ்களை பொருத்தி அங்கே சொகுசாக ஓய்வெடுத்தான்.

இளையவளோ என் இணை இவளோ✔Where stories live. Discover now