💚 இணை 40

1.3K 41 45
                                    

சாம்பவி, வாகை செல்வனுக்கு திருமணம் நடந்து இன்றுடன் ஒன்றரை ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டது. ஒன்றரை ஆண்டுகளை ஒன்றரை நிமிடத்தில் கடந்த உணர்வு செல்வாவிற்கு. பின்னே மகிழ்ச்சியையும், நிம்மதியையும், நிறைவையும் தவிர வேறு எந்த உணர்வையும் அறிய வாய்ப்பில்லாதவன் காலத்தை ஏன் இவ்வளவு சீக்கிரமாக ஓடி விட்டாய் என்று நொந்து கொள்ளத் தானே செய்வான்?

திருமணம் முடிந்ததில் இருந்து தன்னுடைய செல்ல மைமாவை ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் அவன் காதல் செய்ததின் விளைவாக அந்த தம்பதியருக்கு திருமணம் முடிந்த பதினோறாவது மாதத்தில் கார்த்திகா பிறந்து விட்டாள்.

சாம்பவி குழந்தை உண்டாகியிருப்பதை அறிந்த தீபக் அவளுடைய அனைத்து ஸ்கேன் ரிப்போர்ட்டுகளும் தனக்கு ஒருமுறை காட்ட வேண்டும் என்று உரிமையோடு கேட்டு வாங்கி பார்த்து விட்டு, அவளுடைய பாப்பா மிகவும் ஆரோக்யமாக இருப்பதாக அவளிடம் உற்சாகமாக வீடியோ சேட் செய்தான். அவனுடைய குழந்தை ஜேடன் நரேந்திரனையும் அவர்களுக்கு காட்டினான். திவ்யா அடிக்கடி பவியை வந்து பார்த்து உயிரை வாங்குகிறாளா என்றும் கேட்டு சிரித்துக் கொண்டான்.

குழந்தை பிறப்பதற்கு முன்னதாக
ஒருநாள் சாம்பவி தன் கணவனிடம், "ஏய் டாம்பாய்..... உனக்கு நீயே பேர் வச்சுக்கிட்ட மாதிரி இப்ப நம்ம குழந்தைக்கு என்னடா பேரு வைக்கப்போற?" என்று அவன் தோளில் சாய்ந்து கொண்டு அவன் கையை தன்னுடைய பெரிய வயிற்றில் வைத்து கேட்டாள். அவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டவன் அவளிடம்,

"குட்டிப்பாப்பாவுக்கு என்னாத்துக்குடா பாப்பா நம்ம பேரு வக்கிறது? அதான் வீட்ல ரெண்டு பெரிசுங்க இருக்குதுங்கல்ல.... அதுங்கள வக்க சொல்லு! அவளுக்கு அவளா பேரு வச்சுக்க எம்பொண்ணு என்ன அவ அப்பனமேரி யாரும் இல்லாத அநாதப்பக்கியா என்ன?" என்று கேட்டவனின் வாயிலேயே ஒரு போடு போட்டாள் சாம்பவி.

"பேசிக்கிட்டு இருக்கும்போதே உங்கிட்ட இருந்து சொல்லாம கொள்ளாம டப்புன்னு டுப்புன்னு ஒரு அப்பு உழுந்துருது! உனக்குள்ள இருக்குற வார்டனம்மா இப்பயும் அப்டியேதா அலெர்டா இருந்துனு இருக்குது! ஆனா பொட்டுன்னு வாய் மேலயே உட்ட இந்த அடி
என்னாத்துக்கு.......? உங்கிட்ட மட்டும் எம்மா ட்ரை பண்ணாலும் நம்ம பாஷ மாறவே மாட்டேங்குது பாப்பா! அதுக்கோசரம் தான இப்ப ஒரு அப்பு உட்ட?" என்று பவியிடம் கேட்டு சடைத்துக் கொண்டவனிடம் இல்லையென மறுத்தவள்,

இளையவளோ என் இணை இவளோ✔Where stories live. Discover now