💚 இணை 31

746 49 5
                                    

"போனதபா இங்க வந்தசொல நீ எம்மாஞ்ஜாலியா இருந்துனு வந்த? இப்ப ஏம்பாப்பா மூஞ்சிய தூக்கி வச்சுனு ஒக்காந்துனு இருக்குற? ஏதாச்சு பேசு பாப்பா!" என்று பதினோராவது தடவையாக சாம்பவியிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தான் செல்வா.

இங்கிருந்து கிளம்புவதற்குள் தனக்கு தொண்டை அடைத்து அழுகை வந்துவிடக் கூடாது என்று நினைத்த சாம்பவி அவனிடம் எரிச்சல் நிறைந்த குரலில்

"ம்ப்ச்! பேசு, பேசுன்னா என்ன பேசுறது உங்கிட்ட? பேசுறதுக்கு எல்லாம் ஒண்ணுமில்ல. வா போலாம்!" என்று சொல்லி விட்டு எழ முயற்சி செய்ய அவளது கையைப்பற்றி அவளை எழ விடாமல் தடுத்து நிறுத்தினான் வாகை செல்வன்.

"எங்கிட்ட பேசுறதுக்கு உனக்கு ஒரு விஷயமுமே கெடக்கலையா பாப்பா? சொம்மானாச்சுக்கு நெறைய கண்டிஷன் பண்ணுவல்ல; அந்தமேரி ஏதாவது கூட சொல்லேன்! ஆறு வருஷம் கழிச்சுதா பார்த்துக்கப் போறோம்; தண்ணியடிக்கக் கூடாது; தம்மடிக்க கூடாது; துட்ட கண்டமேனிக்கு செலவு பண்ணக்கூடாது; வேற எந்த பொண்ணான்டயும் போயி வழியக்கூடாது! நான் சொன்னது அல்லாத்தையும் செஞ்சு முடிக்கலன்னா நீ என் மூஞ்சியில முழிக்கக்கூடாது! இப்டி எதுனாச்சு கூட சொல்லுமே!" என்று கேட்டவனின் கையை உதறியவள்,

"நான் எதுக்கு இதெல்லாம் ஒங்கிட்ட சொல்லணும்? நீதான் என்னை விட்டுட்டு போறல்ல?" என்று சொல்லிவிட்டு கழுத்தை நொடித்துக் கொண்டாள்.

"ஐய.... நீதான கண்ணு செல்வாவ ஒன்னாண்ட இருந்து அப்பால போயி நிக்கச் சொன்ன; இப்ப என்ன எனக்கு ஒன்னியும் வோணான்னுட்டு செல்வா உன்னோடவே இருந்துடட்டுமா?" என்று கேட்டவனிடம்,

"ம்ஹூம்! நீ கண்டிப்பா என்னை விட்டு விலகிப் போகணும். நிறைய அச்சீவ் பண்ணனும்; அப்பத்தான நீ அப்புறமா எங்கூடவே இருக்க......?" என்று கேட்டவள் பாதியிலேயே தன்னுடைய பேச்சை நிறுத்தி விட்டு அவன் முகத்தைப் பார்க்க அவளுடைய திருதிருவென விழித்த விழிகளே அவன் முகத்தில் சிரிப்பை கொண்டு வருவதற்கு போதுமான கருவியாக இருந்தன.

இளையவளோ என் இணை இவளோ✔Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin