💚 இணை 12

765 47 14
                                    

நமக்கென பல போர்கள் இருக்கையில்…
வெளியிருந்தொரு
விண்கல் வருவதா…
அதை உடைத்திடு
கதவடைத்திடு…
பின் நாம் போரிடுவோம்…

மொழி மத இன பேதம் இருக்கையில்…
நம்மை அழித்திட வானம் விழுவதா…

அதை தடுத்திடு…
கதை முடித்திடு…
பின்னே நாம் அழிவோம்…
நுரை… சிறிது…
கரை… பெரிது…
தடம்… சிறிது…
இடம் பெரிது…

விழும்… மனது…
எழும்… பொழுது…
துயர்… சிறிது…
உயிர்.... பெரிது…

என்ற பாடலுக்கு ஒருநிமிட ரீல்ஸ் செய்திருந்த செல்வா அதைப் பார்த்து விட்டு "தூ....." என்று அவனே அவன் செய்திருந்த ரீல்ஸ்க்காக துப்பிக் கொண்டான்.

"இத்தயெல்லாம் ஒரு ரீல்ஸ்னு போட்டா எவம்பாப்பான்? நம்ம ஏதாச்சு சொல்லிக்கின்னா அத   இந்த வார்டனம்மா காதுல வாங்குதா? நல்லத செய்றதுனால உனக்கு வ்யூஸ் குறைஞ்சாலும் பரவாயில்ல; இதே மாதிரி செய்யிங்குறா! சரி உடு..... நமக்கு ஒரு யம்மா இருந்து அது இத்த மாதிரி சொல்ச்சுன்னா கேக்க மாட்டமா? அதமேரி நென்ச்சுக்க வேண்டியதுதான்!" என்று தனியாக பேசிக் கொண்டிருந்தவன் இப்போது தான் அவனுடைய சாயங்கால வேலையிலிருந்து திரும்பி வீட்டிற்கு வந்திருந்தான்.

அதிகாலை நாலு மணிக்கே எழுந்து மார்க்கெட்டில் லோடுகளை ஏற்றச் செல்பவன் ஆறு மணியளவில் வீட்டிற்கு வரும் போது சாம்பவி அவனுக்கென ஒரு சின்ன பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து வைத்து விட்டு சூடாக பால் ஆற்றிக் கொண்டிருப்பாள்.

பாலைக் குடித்து விட்டு, வட்ட பிஸ்கெட்டுகளையும் உள்ளே தள்ளிய பிறகு தான் செல்வாவிற்கு ஒழுங்காக கண்ணே தெரியும்.

"ஒன்ட்ட வேலைக்கு வந்துகினு செல்வா ஒன்னையவே வேல வாங்கி ரொம்ப கஷ்டப்படுத்துறனாமே.....? இப்பல்லாம் நீயா எந்திரிச்சுக்குற! காலையில வேலைய சூளுவா முடிச்சு வச்சுக்குறதுக்கு அல்லா எல்ப்பும் பண்ற!" என்று சிறு வருத்தத்துடன் அவளிடம் கேட்பவனிடம் சிரிப்புடன்,

இளையவளோ என் இணை இவளோ✔Where stories live. Discover now