💚 இணை 6

835 54 9
                                    

செல்வா தங்களிடம் கேட்ட கேள்விக்கு சாம்பவியும் ஒரு பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள் என்பதை தனசேகர் உணர்ந்தார். இந்த பொடியனை ஏன் வீட்டுக்குள் வர தான் அனுமதித்தோம் என்று யோசித்துக் கொண்டிருந்தார். அந்த அளவிற்கு செல்வா சாம்பவியின்
எல்லா வேலைகளிலும் உதவியாகவும், தனசேகர் மற்றும் கல்யாணிக்கு அவர்களுடைய எல்லா இயக்கங்களிலும் உபத்திரவம் கொடுத்துக் கொண்டும் இருந்தான். வேலையைக் கெடுத்தால் பரவாயில்லை; இப்போது கேள்வி கேட்டுக் கொண்டல்லவா முன்னால் நிற்கிறான் என்று பதட்டமடைந்தவர் தன் மனைவியை நோக்கினார்.

தனசேகரும், கல்யாணியும் சபாபதியிடமிருந்தும், சாம்பவியிடமிருந்தும் நிறைய பணத்தை ஏய்த்து சுருட்டிக் கொள்கிறார்கள்..... அந்த பணத்தில் தான் கணவனும், மனைவியும் உல்லாசமாக ஊர் சுற்றவதும், அவர்களின் மற்ற செலவுகளுக்கு செலவழிப்பதும் என அந்த வீட்டிற்கு வந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே அவனுக்கு தெரிந்து விட்டது. பதினைந்து ஆண்டுகளில் இந்த வீட்டில் சும்மாவே உட்கார்ந்து கொண்டு,
தாம்பரத்தை தாண்டி ஒரு வீட்டு மனையை வாங்கி அதில் ஒரு வீடே கட்டி முடித்திருக்கிறார்கள் என்று அன்று சபாபதி அவனிடம் சொன்ன போது கூட செல்வாவிற்கு அந்த அளவிற்கு கோபம் வரவில்லை.

ஏதோ இப்போது மாப்பிள்ளையின் சம்பாத்யத்தில் இங்கு ஒட்டிக் கொண்டு இருக்கிறோம்; நாளை சாம்பவியின் உயர்படிப்பு, திருமணம், எதிர்கால வாழ்வு என்று வந்தபிறகு தன் மருமகன் இதே மாதிரி தங்களை அவருடன் வைத்துப் பார்த்துக் கொள்வாரா என்று கூட அந்த பெரியவர்கள் யோசித்திருக்கலாம் என்று நினைத்தான்.

ஆனால் அந்த பள்ளி செல்லும் பிள்ளையின் பள்ளிச் சீருடை சற்று தரம் குறைந்த மெட்டிரியலில் இருக்கக் கண்டுதான் மிகவும் கொதித்துப் போனான். பள்ளியில் பவியின் நண்பர்கள் யாராவது அவளது சீருடையில் கைவைத்து அவளை நிறுத்துகிறேன் பேர்வழி என்று தொட்டால் அந்த துணி துவண்டு கிழிந்து விடும் நிலையில் இருந்தது.

இளையவளோ என் இணை இவளோ✔Where stories live. Discover now