💚 இணை 36

784 51 6
                                    

இன்னும் அரைமணி நேரத்தில் செல்வா திவ்யாவின் திருமணத்திற்கு செல்வதற்காக தன்னுடைய வீடாக அவன் உபயோகப்படுத்தும் பெட் க்ளினிக்கில் கால்மணி நேரமாக கிளம்பிக் கொண்டிருந்தான்.

தன் பிம்பத்தைப் பார்த்த போது முழங்கை அளவுக்கு அழகிய சில்வர் நிறத்திலான மென்ஸ் ஸ்லிம் ஃபிட் பார்மல் ப்ளேஸரில்  அந்த கண்ணாடியில் தெரிந்த செல்வா இன்று வழக்கத்திற்கு மாறாக மிக அழகாக தெரிந்தான்.

"என்னா நாம இன்னிக்கு எஸ்ட்ராவா அழகா இருக்கமா? இல்ல கண்ணாடிய நல்லா பளபளன்னு தொடச்சு வச்சுருக்குதா தெரியலயே?
இன்னாடா தம்பி....... இன்னிக்கு நீ செம குஜாலாக்கீற போல்ருக்கு! ஒன்னிய பாத்து எங்கண்ணே பட்டுடும் போலிருக்கே? நம்ம வார்டனம்மா என்னமேரி கெட்டப்புல வந்துக்கினுருந்தாலும், மொத அவதா நம்மளப் பார்த்துனு வாயப் பொளக்கணும்! இம்மாநாள் கட்டி காப்பாத்தி வச்சுனு இருந்த கெத்த அவ முன்னால போட்டு பொசுக்குன்னு ஒடச்சிக்கினு பல்லக்காட்டாத சரியா? நம்ம பவிக்கண்ணு இன்னா ட்ரெஸ்ஸூ போட்டுக்கினு வருவா? செல்வா அங்க வருவேன்னு அவளுக்குத் தெரியுமா? தெரியாதா?" என்று கண்ணாடி முன்னால் நின்று தனக்குத் தானே அனைத்துக் கேள்விகளையும் கேட்டுக்கொண்டிருந்தவன், தன் தலைமுடிக்கு சிறிது ஹேர்ஸ்ப்ரே போட்டு விட்டு தன்னுடைய வீட்டில் இருந்து வெளியேறி திருமண மண்டபத்தை வந்தடைந்தான்.

சாம்பவியும் அன்று தன் அன்னை மற்றும் தந்தையுடன் தில்யாவின் திருமணத்திற்காக கிளம்பிக் கொண்டிருந்தாள். சந்தன நிறப் பட்டுப் புடவையில் சாம்பவி இன்று ரேணுவின் கண்களுக்கு மிகவும் அழகாகத் தெரிந்தாள்.

"வாவ்..... என் அழகிடீ நீ பாப்பு! அதுக்குள்ள ஏன்டீ உனக்கு கல்யாண வயசு ஆச்சு? மறுபடியும் உன்னைய தவழ்ற குழந்தையா மாத்தி முதல்ல இருந்து உன்னை வளர்த்துப் பாக்கணும்னு அம்மாக்கு ஆசையாயிருக்கேடீ பவிம்மா...... என் செல்லம்!" என்று தன் மகளின் கன்னம் கொஞ்சி முத்தமிட்ட ரேணுவின் வயிற்றைக் கட்டி அணைத்துக் கொண்டு,

இளையவளோ என் இணை இவளோ✔Where stories live. Discover now