💚 இணை 11

813 50 8
                                    

"இதுதான் நீ எந்தங்கச்சிக்கு வாங்கிட்டு வந்த கிப்டா? எங்க வீட்டு ஹவுஸ் மெயிட் கூட இத விட ஹைஃபையான ஒரு லன்ஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்ணுவாங்க! ஆனா நீ இந்த மாதிரி ஒரு லோ க்வாலிட்டி ப்ராடெக்ட திவ்யாவுக்குன்னு வாங்கிட்டு வந்ததும் இல்லாம, புதுசா ஸ்வீட் கேக்னு எதையோ செஞ்சுட்டு, பர்த்டே கேக்க வேஸ்ட் பண்ணாதீங்கன்னு வேற அட்வைஸ் குடுக்குற! நான் எதுக்கு உங்க பவிய கேர் பண்ணிக்கணும்? இல்ல அவளுக்காக என் ஸ்கோர்ஸ விட்டுத் தரணும்? நாளைக்கு என் கட் ஆஃப் மார்க்ஸ் கம்மியா இருந்தா அப்போ நீங்க ரெண்டு பேருமா வந்து எனக்கு காலேஜ்ல சீட் வாங்கித் தருவீங்க? இப்டியெல்லாம் ஒண்ணையும் யோசிக்காம பேசுற நீ லூசா? இல்ல உன்னை மாதிரி ஒருத்தனை எல்லாம் இந்த பார்ட்டிக்கு கூட்டிட்டு வர நினைச்ச அந்த சாம் லூசான்னு எனக்குத் தெரியல!" என்று செல்வாவிடம் பேசினான் தீபக்.

இவனது தங்கை கொஞ்சம் சிரித்து விட்டதனால் சற்று முன் இவன் தன்னிடம் நன்றி சொன்னதெல்லாம் சும்மா..... தன் அப்பா, அம்மாவுடன் இணைந்து வாயை மட்டும் அசைத்திருக்கிறான் என்று நினைத்து கடுங்கோபத்தில் நின்றான் செல்வா.

உன்னை எனக்குப் பிடிக்கவில்லை என்று முகத்திற்கு நேராக சொன்னால் கூட அதை ஏற்றுக் கொள்வான்; ஆனால் அவன் பார்க்கும் மனிதர்களில் பலர் தனசேகரைப் போல், கல்யாணியைப் போல், சபாபதியைப் போல், இந்த தீபக்கைப் போல் உள்ளே ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே ஒன்றைப் பேசுபவர்களாக இருந்தால் அவனுந்தான் கோபப்படாமல் என்ன செய்வான்?

சமீபத்தில் அவன் சந்தித்த மனிதர்களும், அவர்களுடைய உரையாடலும் இந்த உலகத்தில்
எங்கு போனாலும் உனக்கு மட்டும் அடுக்கடுக்கான சோதனைகளுக்கு பஞ்சமேயில்லை என்று அவனைப் பார்த்து அந்தக் கடவுள் சொல்வதைப் போல் இருந்தது.

ஒரு பெரிய மூச்செடுத்து விட்டு தீபக்கை நேராக நோக்கியவன் அவனிடம்,

"அண்த்த! நீ அத்த விட ஒருவருஷம் பெரியவன்னு பவிக்கண்ணு எங்கிட்ட சொல்ச்சு! அதான் நீ எங்க பாப்பாவ இஸ்கூலாண்ட கொஞ்சம் நல்லாப் பாத்துக்க முடியுமான்னு ஒன்னாண்ட கேட்டேன்; ஆனா இப்போ நீ அத்த செய்ய வோணாம்
உட்டுடு; இந்த ஒலகத்துலயே எனக்கு ரொம்ப புடிக்காத விஷயம் எது தெரியுமா? நீ ஒண்ணியும் பெரிய ....... இல்லன்னு போற வார பொறம்போக்குலா என்னாண்ட வந்து சொல்லி நம்பள பேஜாரு பண்ணினு இருக்கறது தான்! இத்தோட நிறுத்திக்க அண்த்த.....! செல்வா ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்க மாட்டான்! கோபம் வர்ற வரைக்குந்தான் நம்ப ஓரளவுக்காச்சு டீஜென்டு; கோபம் வந்துடுச்சுன்னா நம்ப பேச்ச நம்பளே கூட காதால கேக்க முடியாது!" என்று தீபக்கிடம் சொன்னபடி இரண்டு மூன்று பட்டன்களை கழற்றிய செல்வா தன்னுடைய சட்டையின் காலரை பின்புறமாக இறக்கி விட்டுக் கொண்டான். இதையெல்லாம் செய்யக்கூடாது என்று சாம்பவி அவனிடம் ஏற்கனவே சொல்லியிருந்தாள் தான்! ஆனால் அவளுடைய கட்டளைகளை இப்போது காற்றில் பறக்க விட்டிருந்தான் செல்வா.

இளையவளோ என் இணை இவளோ✔Where stories live. Discover now