💚 இணை 27

708 48 16
                                    

"என்ன டாடி சொல்றீங்க? இவங்க ஏஜ்க்கு ரெஸ்பெக்ட் குடுத்து, நா இவங்கள ஆன்ட்டின்னு வேணும்னா கூப்டலாம். ஆனா அம்மான்னு எப்டி கூப்ட முடியும்?" என்று சபாபதியிடம் திகைப்புடன் வினவியவளிடம் ரேணுகா,

"அது ஒண்ணுமில்ல பவி..... உன்னோட அம்மா இப்போ உங்க கூட இல்லன்னு சபா ஸார் எங்கிட்ட  வருத்தப்பட்டு சொல்லிட்டு இருந்தாங்க. அதுனால என்னை அம்மா மாதிரி நினைச்சுக்கன்னு  சொல்ல வந்தாங்களோ? என்னவோ? இல்ல சபா ஸார்?" என்று கேட்டு அவரை ஒரு கெஞ்சல் பார்வை பார்த்த ரேணுகாவின் கண்ஜாடையை சபாபதி கொஞ்சங்கூட சட்டை செய்யவில்லை.

மனைவியின் வாயிலிருந்து புறப்பட்ட ஸார் என்ற அழைப்பு அவரது பிபிஐ எகிற வைத்துக் கொண்டிருந்தது. ஏற்கனவே இவள் பேச்சைக் கேட்டு பத்து வருடங்களை வீணாக்கி விட்டார். இன்றும் இவளுடைய பேச்சைக் கேட்டார் என்றால், இவள் வாழ்வு முழுவதற்கும் பவிக்கு ஹெல்பராக வாழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று நினைத்தவர் ரேணுகாவை ஒரு அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தார்.

"என்னங்க ஸார்! கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம எதையோ யோசிச்சுட்டு நின்னுட்டு இருக்கீங்க?" என்று அவரை மறைமுகமாக தான் பேசும் போக்கிலேயே பேசுமாறு உந்திய ரேணுகாவிடம்,

"பதில் தான ரேணு சொல்லணும்? சொல்லிட்டாப் போச்சு!" என்று சொல்லி விட்டு தன்னுடைய மகளின் எதிரே சென்று நின்றார்.

"பவி..... உங்கிட்ட பேசுறதுக்கு என்னோட தயக்கமே எனக்குப் பெரிய எதிரியா இருந்துச்சுன்னு ஏற்கனவே உங்கிட்ட நான் சொல்லியிருந்தேன்ல! அது இந்த விஷயத்துல தான்..... ரேணுகா என்னோட காலேஜ் மேட்! நௌ ஷீ இஸ் மை வொய்ப்! நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு பத்து வருஷம் ஆச்சு! படிக்குறப்பவே இவளுக்கு எம்மேல லவ்..... என்னை நெறய தடவ சுத்தி சுத்தி வந்தா! நான் இவள திட்டி, அட்வைஸ் பண்ணி, கோபத்துல ஒரு நாள் அடிக்கக்கூட செஞ்சுட்டேன். அதுக்கப்பறம் எனக்கு வித்யாவோட மேரேஜ் நடந்தது. அந்த மேரேஜ்ல நான் மட்டுமே சந்தோஷமா இருந்தேன்; நான் மட்டுமே வித்யாவ லவ் பண்ணவும் செஞ்சேன்! கடைசில நான் மட்டுமே உனக்கு அப்பாவாவும் ஆனேன்!"

இளையவளோ என் இணை இவளோ✔Where stories live. Discover now