CHAPTER 3

10.7K 246 16
                                    

அர்ஜுன் POV:

     வீட்டு கதவு பூட்டிருக்கே.... கதவ தட்டலாமா வேண்டாமானு நான் யோசிச்சுட்டே வந்தேன்....

கதவ தட்டலானு போனேன் பாத்தா கதவு சும்மாதான் க்ளோஸ் ஆயிருந்துச்சு.

எத்தனதடவ சொன்னாலும் இந்த மரமன்டைக்கு  புரியவே மாட்டேங்குது....கதவ உள்ள க்ளோஸ் பன்னிட்டு சேஃப்டியா  இருன்னு சொன்னா எப்புடி கதவ திரந்து போட்டு தூங்குது பாருன்னு நினச்சிட்டே அவள திட்டுரதுக்காக அவ ரூம்கு உள்ள போனன்.

ஆனா  அங்க அவள பாத்துட்டு என்னைய மறந்து நின்னு அங்க நடக்குறத பாத்துட்டு இருந்தேன்.

என்னோட அம்மு அவ குழந்தைக்கிட்ட பேசிட்டு இருந்தா.எவ்வளோ அழகா இருந்துச்சு தெரியுமா அத பாக்குறதுக்கு....

எனக்கு என்னோட அம்மா எப்புடி இருப்பாங்கனு  இதுவரைக்கும் தெரியாது.....அவுங்க பாசமும் எனக்கு கிடச்சதே இல்ல.ஆனா  நான் அம்முவ பாத்ததுக்கு அப்புறமா எனக்கு எல்லாமே கிடைச்சது.....லெஷ்மி அம்மாவும் சரி ராஜசேகர் அப்பாவும் சரி என்னைய அவுங்க பையனாவே பாத்துக்கிட்டாங்க....

அவுங்க மட்டும் இல்லை அவுங்க பொன்னு கலையும் எனக்கு ஒரு அம்மாவாவே மாறிட்டா.எனக்கு என்ன புடிக்கும் என்ன புடிக்காதுனு பாத்து பாத்து பன்னுவா.

தப்புபன்னா திருத்துறதல ஒரு அம்மாவா,கஷ்டப்படும் போது தோல் கொடுத்து ஆறுதல் சொல்ற ஒரு தோழியா,சின்ன சின்னதா குட்டியா சண்ட போடும்போது என்னோட குட்டி ராட்சஷியா எல்லாவாவுமே என் வாழ்க்கையில் இதுநாள் வரைக்கும் இருந்துருக்கா...

அவளவிட நான் வயசுல பெரியவன்தான் ஆனா அவக்கிட்ட எப்பவுமே நான் ஒரு குழந்தையாவே மாறிடுவேன்....

காலேஜ்ல எங்கள எல்லாரும் லவ் பன்றிங்களான்னு கேப்பாங்க.அந்த அளவுக்கு ரெண்டு பேருமே  இருந்தோம்.

என்னோட அம்முவ என்னைக்கும் நான் அப்புடி நினைச்சதே இல்ல.....
ஏன்னா எங்க  இரண்டு
பேருக்கும் இடையில இருக்குற உறவப்பத்தி சொன்னா அது மத்தவங்களுக்கு புரியாது.நட்பையும் தாண்டி ஒருவிதமான புனிதமான உறவுன்னு சொல்லலாம்....

காதல் ♥️♥️♥️ (Completed)Where stories live. Discover now