CHAPTER 27

6.6K 186 60
                                    

Flashback continues:

Lakshmi POV:

    ஊருக்கு போன நான் உன் அம்மா இருந்த நிலமைய பாத்துட்டு என்னால தாங்கிக்க முடியல.
உன் அம்மா உடம்பு எல்லாம் காயம்.யாரோ நல்லா அவள அடிச்சிருக்காங்க .
அம்மா இல்லாத புள்ளன்னு உன் தாத்தா அவள சின்ன புள்ளையில இருந்து அடிச்சதே கிடையாது.
அப்புடி இருந்தவ உடம்பெல்லாம் காயத்தோட உக்காந்து இருந்துருக்குறத பாத்துட்டு மனசு பொருக்கல.
அப்போதான் நீ அவ வைத்துல இருக்கிற.விஷ்ணுக்கு ஆறு வயசு.
நான் உன் அம்மா பக்கத்துல போய் உக்காந்தேன்.

"ஏன்டி இப்புடி பன்ன.எங்க டி இருந்த இவ்வளோ நாளா.யார்க்கிட்டையும் சொல்லாம போயிட்டியே.ஏன் டி உடம்பெல்லாம் காயமா இருக்குது என்னாச்சு."

"இதுதான் விதி லஷ்மி.நான் என்னோட அப்பாவ விட்டுட்டு காதல்தான் பெருசுன்னு போனேன் அதுக்கு கெடச்ச பரிசுதான் இது.என் அப்பா இறுதி சடங்க கூட  பன்னமுடியாத பாவியா உன் முன்னாடி நிக்குறேன்."

"உன் வீட்டுக்காரு எங்க.யாரு உன்ன அடிச்சா."

"நான் காதலிச்சவன் நல்லவன்னு நம்புனேன்.ஆனா அவன் என்னை இல்லை என் பனத்ததான் அதிகமா காதலிச்சிருக்கான்னு கொஞ்ச நாள் முன்னாடிதான் தெரிஞ்சுக்கிட்டேன்."

"என்னடி சொல்ற."

"பனத்தாச யார விட்டுச்சு லஷ்மி.
நான் வீட்ட விட்டு போய் அவன்கூட  சந்தோஷமா வாழ்ந்துட்டு இருந்தேன்.அவனும் நல்லாதான் பாத்துக்கிட்டான்
விஷ்ணுவும் பொறந்துட்டான்.

அவன் என்னைய அவுங்க வீட்டுக்கு  கூட்டிட்டு போகாம தனியா வச்சி பாத்துக்கிட்டான்
நான் ஏன்னு கேட்டதுக்கு அவுங்க சம்மதிக்கிற வரைக்கும் நம்ம கல்யாணம் பன்னது குழந்தை இருக்குறது யாருக்கும் தெரிய வேண்டாம் இல்லைன்னா அவுங்க அம்மா அப்பா உண்மை தெரிஞ்சு தற்கொலை பன்னிப்பாங்கன்னு சொன்னான்.

நானும் அவன் சொன்ன எல்லாத்தையும் நம்புனேன் லஷ்மி.அப்புடியே அஞ்சு வர்ஷம் போயிடுச்சு.விஷ்ணுவும் பெரிய பையனாய்டான்.

காதல் ♥️♥️♥️ (Completed)Where stories live. Discover now