CHAPTER 4

9.2K 186 14
                                    

ஜெய் Pov:

       ஆஃபீஸ்  போன உடனே... நிறைய மீட்டிங் இருந்துச்சு.எல்லா மீட்டிங்கையும் முடிச்சிட்டு நான் என்னோட கேபின்ல உக்காந்திருந்தேன்.
அப்பதான் என்னோட இன்வஸ்டிகேடர்கு நான் கால் பன்னேன்.

"ஹலோ ராம் எதாவது தகவல் கெடச்சதா கலைய பத்தி"னு கேட்டேன்

"இல்ல ஸார் அவுங்க எங்க இருக்காங்க என்ன பண்றாங்க எதுவுமே கிடைக்கல. நான் அவுங்க கடைசியா வேலைப் பாத்துட்டு இருந்த கம்பெனில போய்  விசாரிச்சேன்.அங்கையும் தெரியலனு சொல்லிட்டாங்க ஸார்."னு அவரு சொன்னாரு....
எனக்கு அதை கேட்டு கோவம் வந்துடுச்சு....ஆறு மாசமா இதே பதில்தான்.....அவ எங்க இருக்குறான்னு கண்டேபுடிக்க முடியல....

" வாட் த ஹெல் ராம் எவ்லோ நாள் இப்புடியே சொல்லிட்டு இருப்பிங்க.நீங்க என்ன பன்னுவீங்கனு எனக்கு தெரியாது. என்னோட கலை எங்க இருக்குறானு எனக்கு சீக்கிரம் தெரிஞ்சாகனும்."

"ஸார் ப்ளீஸ் எமோஷனல் ஆகாதிங்க.நாங்களும் தேடிட்டுதான் ஸார் இருக்குறோம்.எதாவது தெரிஞ்சா கண்டிப்பா சொல்றோம் ஸார்."

"ஓகே ராம்."

எங்க டி இருக்குற நீ.....
என்னோட உடம்புல கடைசி மூச்சு இருக்குற வரைக்கும் உன்ன நான் தேடிட்டேதான் இருப்பேன்னு அவள நினைச்சுட்டே வெரிச்சோடி இருக்குற அவளோட கேபின பாத்துட்டே உக்காந்திருந்தேன்......
ஆஃபீஸ்ல அவ வொர்க் பன்னப்போ நாங்க ரெண்டு பேரும் ஒன்னா இருந்தது எல்லாம் ஞாபகத்துக்கு வந்துடுச்சு.
அதுல நேரம் போனதே தெரியல சாயுங்காலம் ஆயிடுச்சு.

வீட்டுக்கு போகலானு கிளம்புனேன்.

வீட்டுக்குள்ள போனா அங்க நிறைய பேர் உக்காந்து அப்பாகிட்டு பேசிட்டு இருந்தாங்க.என்னோட தங்கச்சி புடவை கட்டி நின்னுட்டு இருந்தா.என்ன நடக்குதுனு புரியாம நான் அம்மாகிட்ட போனேன்.

"மா என்னாச்சு நம்ம வீட்டுக்கு ஏன் இவ்லோ பேர் வந்துருக்காங்க."னு அம்மாக்கிட்ட கேட்டேன்

காதல் ♥️♥️♥️ (Completed)Where stories live. Discover now