CHAPTER 31

5.8K 187 36
                                    

Flashback continues:

Jai pov:
  
      என்னோட ஆஃபீஸ்ல கலை நின்னுட்டு இருந்தா.இவ எதுக்கு இங்க வந்துருக்கா....ஒருவேளை நம்மதான் அம்மாவ இவ வீட்டுக்கு அனுப்பிவிட்டோம்னு தெரிஞ்சுபோச்சோ.அதுக்குதான் சண்டை போட வந்துருக்காளோன்னு நான் அவள பாத்துட்டே இருந்தேன்.
அப்புறம் அவள உள்ள வர சொன்னேன்.

அப்போதான் என்னோட செக்ரெட்ரீ
"ஸார் கொஞ்சம் முன்னாடி நான் சொல்லிட்டு இருந்த கேண்டிடேட் இவங்கதான்."னு சொன்னாங்க.

ஓ...அப்போ இங்க இண்டர்வ்யுகுதான் வந்துருக்கா போலன்னு நான் என்னோட செக்ரெட்ரீய போக சொல்லிட்டு அவள உள்ள வர சொல்லிட்டு உக்கார சொன்னேன்.

அவ ரொம்ப பதட்டமா இருக்குறான்னு அவ முகமே நல்லா காட்டி குடுத்துச்சு.

"ஏ...ஜஸ்ட் ரிலாக்ஸ்..ஏன் இவ்வளோ டென்ஷன்.இது சாதாரணமான இண்டர்வ்யுதான.அதுவும் என்னைய உனக்கு நல்லா தெரியும் அப்புறம் எதுக்கு இவ்வளோ பயப்படுற.ஃபர்ஸ்ட் தண்ணியக் குடி."னு அவள தண்ணி குடிக்க சொன்னேன்.

நான் கலையோட சர்டிபிக்கேட்ஸ் எல்லாம் பாத்துட்டு இருந்தேன் அப்போ அவ "தேங்க் யு ஸோ மச் ஸார்..."னு சொன்னா.

"இட்ஸ் ஓகே...... நீ  மத்த ஸ்டாஃப்ஸ் இருக்குறப்போ மட்டும் என்னைய ஸார்னு சொன்னா போதும் மத்தபடி நானும் நீயும் மட்டும் இருக்கும்போது ஸார்லாம் வேண்டாம் எப்பவும் போல நீ என்கிட்ட பேசலாம்."னு சொன்னேன்.

அவளும் எந்த ரியாக்ஷனும் காட்டாம அமைதியா சரின்னு தலயாட்டுனா.

"சரி.....என்னோட கம்பெனிக்கு வரமாட்டேன் அப்புடி இப்புடின்னு சொன்ன இப்போ எதுக்கு இண்டர்வ்யுக்கு வந்துருக்க... ஏன் இந்த திடிர் மாற்றம்னு தெரிஞ்சுக்கலாமா."னு எதுவும் தெரியாத மாதிரி அவக்கிட்ட கேட்டேன்.

"நேத்து உன் அம்மா என்னோட வீட்டுக்கு வந்துருந்தாங்க.அவுங்க நான் உன் கம்பெனில ஜாய்ன் பன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன்னு என்கிட்ட சொன்னாங்க அதான்."னு சொன்னா.

காதல் ♥️♥️♥️ (Completed)Where stories live. Discover now