கல்கி

209 33 6
                                    

இதுவரை : மாயன் give முல்லை letter to கதிர்

இனி :

        கதிர் இரவு உணவை முடித்துவிட்டு எல்லோரும் உறங்கிய பின் வேலைக்கு சென்றார். எல்லா நாளும் செல்லவில்லை,  முடியும் நேரத்தில் வருவதாக கூறி இருந்தார்,  வாரத்தில் 3 நாள் வேலைக்கும் 3 நாள் படிப்புக்கும் ஒரு நாள் நூலகத்திக்கும் ஒதுக்கினர்,  நூலகம் செல்லும் நாளன்று இரவு பின் புறத்தில் அமர்ந்து நிலவுடன் பேசுவது,  முல்லையின் சிறுகதை பற்றிய சிந்தனை இவ்வாறாக நாட்கள் கழிந்தது..

        3மாதங்கள் கழிந்த நிலையில் nov  மாதத்தில் exam ஆரம்பித்தது, கதிர் முழு முயற்சியுடன் படித்து பரீட்சைகளை எழுதி முடித்தார். பரீட்சை முடிந்த வாரம் ஒரு வித திருப்தியுடன் நூலகம் சென்றார்...

       மாயன் வேறு ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த படியால் கதிர் நேராக சென்று வாரமலரை எடுத்து படிக்க ஆரம்பித்தார்..

       சிறுகதை படிக்க படிக்க கதிருக்கு கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை..

(சிறுகதை சுருக்கம்)
                            
                      வறுமை

        குடும்பத்தில் பிறந்த முதல் பெண் (கல்கி) வறுமை காரணமாக, சொந்த ஊரிலிருந்து தொலை தூரம் சென்று வேலை பார்க்கிறாள்,  அவளுக்கு தங்கை கடிதம் எழுதியுள்ளார்..

  "அக்கா எனக்கு வளைகாப்பு நல்ல படியா முடிஞ்சுது,  பாப்பா பிறக்கும் போதாவது நீ பார்க்க வருவியா கா,  என் கல்யாணத்துக்கும் நீ வரல,  எனக்கு உன்ன பார்க்கணும் போல இருக்கு,  இங்க தம்பி தங்கைகளும் உன்ன எதிர்பார்த்துட்டு தான் இருகாங்க"

கல்கியின் மனநிலை :

         "தென்னை மரம் வாழ முடியாத பிரதேசத்தில் இருந்து வந்த கடிதத்தை வாழை மரம் பூத்து குலுங்கும் இடத்தில இருந்து படிக்கிறேன் ", நான் அங்கு எப்படி வருவது,  வந்து என்ன செய்வது,  உன் வயிற்றில் இப்பொது தான் குழந்தை வளர்கிறது ஆனால் அதற்கு முன் நீ இரு குழந்தைகளை பேணி காக்கும் தாயாகி இருப்பதால் தான் நான் இங்கு நிம்மதியாக வேலை செய்கிறேன்,  எனக்கும் உங்களோடு வாழ ஆசை,  பிறக்கவிருக்கும் தளிரை அள்ளி எடுக்க ஆசை,  ஆனால் இந்த ஆசைக்கெல்லாம் ஆயுள் இல்லை,  கற்பனையில் வாழ்கிறேன் அழகாக என் எண்ணப்படி....

கதிரின் அகமுடையாள் Where stories live. Discover now