Clarification chap

256 46 27
                                    

    Filler :

       நம்ம முல்லை பேர் " நித்யமுல்லை"

பார்வதி மா இருந்த வரை,  முருகன் (கந்தன்) அப்பாவும் பார்வதி அம்மாவும் முல்லை னு தான் கூப்பிடுவாங்க....

முல்லை 5th படிக்கும் போது தான் பார்வதிமா ஒரு accident ல இறந்துட்டாங்க....

மாயனுக்கு அம்மா இல்லை,  முல்லை கு senior தான் மாயன்,  பார்வதி மதியம் school கு lunch கொண்டு போகும் போது எதேச்சையா மாயன் சாப்பிடாம இருக்கறதை பார்த்து அவருக்கும் தர, அது தொடர்ந்தது,  மாயனும் முல்லைக்கும் ஒரு bounding create ஆயிடுச்சு,  இது முல்லை அப்பாக்கு தெரியாது....

பார்வதி இறந்ததும் இரண்டு பேருக்கும் தாங்கிக்க முடியல,  இருந்தாலும் மாயன் முல்லையை school ல நல்ல படியா பார்த்துக்குவாரு...

வள்ளி வந்ததுக்கு அப்பறம் முல்லைக்கு சித்தி கொடுமை ஆரம்பித்தது...

மாயன் தனது வீட்டை விட்டு வெளியே வர காரணமும் அது தான், முல்லையின் நிலைமையை  அவனால் உணர முடிந்தது,  அவனால் முல்லைக்கு செய்ய முடிந்த உதவி அவளுக்கு ஆறுதல் சொல்வதும் முடிந்த வரை சிரித்த படி வைத்து கொள்வதும் தான்...

         முல்லை மிகவும் நன்றாக படிப்பவள்,  அவள் 10 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றும் அவளால் படிப்பை தொடர முடியவில்லை,  காரணம் வள்ளி தனக்கு உடம்பு சரியில்லை,  வீட்டு வேளை செய்ய முடியாது என கூறி தடுத்து விட்டார்..

     முல்லை வீட்டு வேலைகளை செய்து விட்டு தினமும் கோவிலுக்கு செல்வது வழக்கம். மாயன் main post office இல் வேலைக்கான interview நடப்பதை தெரிந்து,  முல்லையிடம் தெரிவிக்க அவளும் செல்ல  அதிர்ஷ்ட வசமாக வேலை கிடைத்தது...

        முல்லைக்கு வேலை கிடைத்ததால் மேட்கொண்டு படிக்க முடியாது என்பதால்,  முல்லையை அவர்கள் இருக்கும் வீட்டின் பின் புற அறையில் தனியே தங்க வைத்து விட்டார் வள்ளி,  அவளின் சம்பளத்தை வைத்து அவளுக்கு வேண்டியவற்றை செய்து கொள்ள வேண்டும் எனவும் இதன் பின்னர் கந்தன் எதுவும் செய்யமாட்டார் எனவும் கூறி விட்டார்...

கதிரின் அகமுடையாள் Where stories live. Discover now