ரோஜா

188 37 6
                                    

இதுவரை : கதிர் 12th pass

இனி :

      முல்லைக்கு கதிரின் கடிதம் கிடைத்த பின்பு மிகவும் உச்சாகமாகவும் சந்தோசமாகவும் இருந்தாள். பரீட்சை முடிவு எப்போது வரும் என நண்பர்களிடம் விசாரித்து வைத்து கொண்டாள்..

       மறுபக்கம் கதிரும் பெரும் எதிர்பார்ப்புடன் result காக காத்திருந்தான். கதிரின் முகத்தில் அவ்வப்போது வரும் பாவனைகளையும்  அவனது களைப்பையும் ஜீவா கவனித்து கொண்டிருந்தான்.  கதிர் result வந்த பின்பு என்ன செய்யலாம் என யோசித்து கொண்டிருந்தான்..

      3மாதங்களாக வாரத்தில் 3நாட்கள் வேலை பார்த்து 10000 சேர்த்து வைத்திருந்தான் (300/day). முல்லைக்கு தர வேண்டிய 1000ஐ தனியே எடுத்து மஞ்சள் துணியில் சுற்றி வைத்திருந்தான்.

       Dec மாதம் தொடங்கியது,  முல்லை கொடுத்த dec பூக்கள் பூத்து குலுங்கியது,  கதிருக்கு அதை பார்த்ததும் அவ்வளவு புத்துணர்வு மேலோங்கியது. இடையில் கதிர் முல்லையின் சிறுகதையை படிப்பதும் கடிதம் எழுதுவதும், முல்லை பரிசாக நாற்றுகளை கொடுப்பதும் வாடிக்கையானது...

         முல்லைக்கு ராமர் மீது அளவு கடந்த பற்று அதன் காரணமாக ராமவனம் பூவை கட்டி சீதையின் சன்னதிக்கு தருவாள். சீதையின் மனம் முழுவதும் நிறைந்த ராமனை, சீதையிடம் சேர்ப்பதாக ஒரு உணர்வு அவளுக்குள்....

        அவள் வீட்டிலும் ராமவனம் செடியை வைக்க எண்ணி தோழியிடம் கேட்டாள்,  அவளது தோழியும் நாளை தருவதாக கூறினாள்..

        Dec 11 தேதி இரவு, இருவருக்கும் மனம் முழுவதும் படபடப்பு,  விடியும் நாள் அவர்கள் கனவின் முதல் படிக்கு காலம் தரும் விடை, கதிர் dec பூக்களின் அருகில் அமர்ந்து நட்சத்திரத்தை பார்த்து கொண்டிருந்தான்.

      சில நிமிடங்கள் கழித்து பூக்களை தடவி விட்டு ஒன்றும் பேசாமல் சென்று உறங்கிவிட்டான்,  கனவில் பாண்டியன் கையில் முல்லை பூவை சிரித்த படி கொடுத்து விட்டு மறைய,   திடுக்கிட்டு முழித்தான், புதையல் கிடைத்த மகிழ்ச்சி,  உள்மனம் நாளை வெற்றி நிச்சயம் என சொல்லியது...

கதிரின் அகமுடையாள் Where stories live. Discover now