கதிர் மனதில் முல்லை

221 45 9
                                    

இதுவரை : கதிர் with கண்ணன்

இனி :  

Ka: என்ன னே ஒன்னும் பேசமாட்டேங்குறே

K: என்ன சொல்லணும்

Ka: நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லலே,  ஒரு வேலை உனக்கு உன்மேல  doubt ah...

K: என்ன doubt

Ka: எனக்கெல்லாம் எப்படி love வரும் னு யோசிக்கரயோ,   என சிரிக்க...

K: டேய்

Ka: பின்ன என்ன னே,  நீ நல்ல பையன்,  நல்ல தம்பி,  நல்ல அண்ணன்,  நல்ல கொழுந்தன்,   ஏன் மகா பாப்பாக்கு நல்ல அப்பா வா கூட இருக்கே...

     அடுத்து ஒரு பொண்ணுக்கு  நல்ல தோழனா,  காதலனா,  கணவனா  இருக்கனும் இல்ல...

K: டேய் நீயா டா இது

Ka: அது ரொம்ப யோசிக்காதே னே,  இதோ இந்த தொடர் கதை ல,  இந்த dialogue வருது என சிரிக்க

K: அதானே எந்திரிச்சு போடா முதல்ல

Ka: சரி சரி நான் போய் tv பார்க்கறேன்,  bye

       கண்ணன் சென்றதும் கதிர் கு அவன் பேசிய வார்த்தைகள் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது,  room இல் இருந்து அப்படியே யோசித்து கொண்டே பின் பக்கம் வந்தான்...

       அவனின் சகி கொடுத்த கொய்யா  நாத்து மரமாகி நின்று கொண்டிருக்க,  அதன் நிழலில்  அமர்ந்தான்.  பார்க்கும் இடம் முழுதும் அவளின் பரிசு சூரிய காந்தி,   ராம  வனம், செவ்வந்தி, dec பூ,  மரிக்கொழுந்து,  அரளி, செண்பகம்,  என நிறைந்திருக்க அவன் மனமும்  பூத்தது...

கதிரின் மனபோராட்டம்  :

       நமது வாழ்வின் அடுத்த கட்டம் ஒரு பெண்ணுக்கு துணைவன்,   துணைவன் என்றால் சுக  துக்கத்தில்  பங்கு  கொள்பவன், அதோடு அன்பு,  அக்கறை,  பாதுகாப்பு, அரவணைப்பு அனைத்தும் கொடுப்பவன், எல்லாவற்றிக்கும் மேல் அவளின் நம்பிக்கையை பெற வேண்டும்,  இதற்கு அவன் முதலில் அவளின் நண்பனாக இருக்க வேண்டும்...

      தன் வாழ்விலும் ஒரு பெண்ணின்  துணை தேவை,  அவளும் அவனுக்கு தோழியாக இருக்கும் பட்சத்தில்  வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிவிடும்,  அப்படி இருக்கும் போது அவனின்  தோழியே துணைவியாக வந்தால் என்ன,  என யோசித்தான்....

கதிரின் அகமுடையாள் Where stories live. Discover now