17 பழைய நினைவுகள்

795 54 8
                                    

17 பழைய நினைவுகள்

ஆசிரமத்தில் இருந்த பிள்ளைகள், எப்போதும் இல்லாத அளவிற்கு சந்தோஷமாய் இருந்தார்கள். ஒரே நேரத்தில், இவ்வளவு புது துணிகள் அவர்களுக்கு கிடைப்பது இது தான் முதல் முறை. அதே நேரம், அவர்களுக்கு பிரியமான ரோகிணி அம்மா அவர்களை விட்டு செல்ல போகிறார் என்பது அவர்களுக்கு தாளாத துயரை தந்தது.

"நீங்க மறுபடியும் இங்க வரவே மாட்டீங்களா ரோகிணி அம்மா?" என்றான் ஒரு சிறுவன் கவலையாய்.

ரோகிணியின் கண்கள் கலங்கிவிட்டது என்று கூற வேண்டிய அவசியம் இல்லை அல்லவா?

"நான் ஏன் வராம போக போறேன்? நீங்க எல்லாரும் என்னை இங்கிருந்து ஒரேடியா அனுப்பிடலாம்னு நினைச்சீங்களா? அது நடக்காது. நான் அடிக்கடி இங்க வந்துகிட்டு தான் இருப்பேன். வரும் போதெல்லாம் உங்க எல்லாருக்கும் நிறைய கிஃப்ட் வாங்கிட்டு வருவேன்" என்றார் ரோகிணி தன் சோகத்தை வெளி காட்டிக் கொள்ளாமல்.

அதைக் கேட்டு சந்தோஷமான அந்த சிறுவன், அதை எல்லோரிடமும் கூற ஓடிச் சென்றான்.

"ரோகிணி அம்மா நம்மளை பார்க்க அடிக்கடி வருவாங்களாம். நிறைய கிஃப்ட் வாங்கிட்டு வருவாங்களாம்" என்றான் சந்தோஷ மிகுதியில்.

அதைக் கேட்டு மற்ற பிள்ளைகளும் ஆர்ப்பரித்தார்கள். அந்தப் பிள்ளைகளுக்காக வருத்தப்பட்டார் கிரிவரன். ரோகிணியை பற்றி அவருக்கு நன்றாக தெரியும். அவரை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவ்வளவு இனிமையான குணநலமுடையவர். அவரை இங்கிருந்து அழைத்துச் சென்றால், நிச்சயம் பிள்ளைகள் தவித்து தான் போவார்கள்.

கடையில் இருந்து கொண்டுவரப்பட்ட துணிமணிகளை, அடுக்கிக் கொண்டிருந்ததை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தான் ரிஷிவரன். அந்த ஆசிரமத்தில் இருந்த அறைகளை அவன் கவனித்தான். அவனைச் சுற்றி வளைத்துக் கொண்ட பிள்ளைகள், ஏராளமான கேள்விகளை கேட்டு அவனை துளைத்து எடுத்தார்கள். அவன் அனைத்திற்கும் பொறுமையாய் பதிலளித்துக் கொண்டிருந்தான். அந்த வேலையை முடித்துக் கொண்டு, தன் பெற்றோரை நோக்கி வந்தவன், மதுமிதாவை தேடினான். அவள் அங்கு இல்லாமல் போகவே, அவள் எங்கே என்று கிரிவரனிடம் பார்வையால் கேள்வி கேட்டான். அவரும் கடற்கரையை நோக்கி தன் கண்களை காட்டினார்.

கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️Where stories live. Discover now