53 மருமகப்பிள்ளை

783 44 8
                                    

53 மருமகப்பிள்ளை

அனைவரும் மதிய உணவு சாப்பிட தொடங்கினார்கள்.

"ஆன்ட்டி, நான் அம்மா வீட்டுக்கு போகணும்" என்றாள் மதுமிதா.

ரோகிணி எதுவும் கேட்பதற்கு முன்,

"எதுக்கு?" என்றான் ரிஷிவரன்.

"என்னோட புக்ஸை எல்லாம் கொண்டு வரணும். நாளையில இருந்து நம்ம காலேஜுக்கு போகணும் இல்ல..." என்றாள்.

ஆமாம் என்றார் ரோகிணி.

"சரி, நாளைக்கு காலைல இங்கிருந்து நேரா உங்க அம்மா வீட்டுக்கு போய், புக்ஸை எடுத்துக்கிட்டு அங்கிருந்து காலேஜுக்கு போகலாம்" என்றான் ரிஷி

"சரி" என்றாள் மதுமிதா.

"அது சரி மது, நீ காலேஜுக்கு தாலியோடவா போக போற?" என்றார் கிரிவரன்.

அவள் அவருக்கு பதில் கூறும் முன்,

"ஆஃப் கோர்ஸ் டாட், அவ என்னோட வைஃப். அவ யாரோட வைஃப்னு ஸ்டுடென்ட்ஸ்க்கு தெரியணும்" என்றான் ரிஷிவரன் தெனாவெட்டாகாக.

"அப்படின்னா உன்னோட கதை என்ன? நீ யாரோட புருஷன்னு எல்லாருக்கும் தெரிய வேண்டாமா?"

"கண்டிப்பா தெரிஞ்சிக்குவாங்க. நானே அதை எல்லார்கிட்டயும் ஓபனா சொல்ல போறேன். நான் எதுக்கு மறைக்கணும்?" என்றான்.

"எங்களுக்கு நிச்சயதார்த்தம் ஆயிடுச்சுன்னு நிறைய பேர் நினைச்சுக்கிட்டு இருக்காங்க. இப்போ கல்யாணமே ஆயிடுச்சுன்னு தெரிஞ்சா என்னோட ஃபிரெண்ட்ஸ் எல்லாம் என்ன செய்ய போறாங்களோ" என்றாள் மதுமிதா.

"நம்ம ரிசப்ஷனுக்கு எல்லாரையும் கூப்பிடு. அவ்வளவு தான்... சிம்பிள்" என்றான் ரிஷிவரன்.

"ஆமாம். நான் அவங்களை நிச்சயம் கூப்பிடுவேன். உன்னோட ப்ரெண்ட்ஸ் கதை என்ன? நமக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு கேள்விப்பட்டா, அவங்களுக்கெல்லாம் ஹார்ட் அட்டாக் வரப்போகுது" என்று சிரித்தாள் மதுமிதா.

"அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க" என்றான் ரிஷி.

"அதுல என்ன ஒரு பிரச்சனைனா, சந்தோஷத்துல அவனுங்க அடி பின்னிடுவானுங்க" என்றார் கிரிவரன் சிரித்தபடி.

கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️Where stories live. Discover now