45 தீர்மானம்

642 54 6
                                    

45 தீர்மானம்

முன்னறிவிப்பின்றி தனது கட்சி அலுவலகத்திற்கு வந்த கிரிவரனை பார்த்த சோனாச்சலம் ஆச்சரியமடைந்தார். அவருக்கு அதில் சந்தோஷம் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. மரியாதையுடன் அவரை வரவேற்றார்.

"வாங்க கிரிவரன் சார்"

"நான் உங்க மேல கடுமையான மன வருத்தத்தில் இருக்கேன். நான் உங்ககிட்ட இதை கொஞ்சமும் எதிர்பார்க்கல"

என்ன நடந்தது என்று தெரியாத சோனாச்சலத்திற்கு தூக்கி வாரி போட்டது.

"என்ன ஆச்சு சார், ஏன் கோவமா இருக்கீங்க? நீங்க கோவப்படற அளவுக்கு நான் எதுவும் செய்யலையே" என்றார் பதற்றத்துடன்.

"ரிஷிவரனுக்கு மதுமிதாவை கல்யாணம் பண்ணி வைக்கிறதை பத்தி நான் ஏற்கனவே உங்ககிட்ட சொல்லி இருந்தேன்"

"ஆமாம் சொல்லி இருந்தீங்க"

"அப்படி இருக்கும் போது, எவ்வளவு தைரியம் இருந்தா, உங்க பிள்ளை மதுமிதா வீட்டுக்கு போய் அவங்க அப்பா கிட்ட அவளை பொண்ணு கேட்டிருப்பான்?"

தன் தலையில் இடி இறங்கியது போல் இருந்தது சோனாச்சலத்திற்கு. அருணாச்சலம் என்ன செய்து தொலைத்தான் என்பது உண்மையிலேயே அவருக்கு புரியவில்லை. அதேநேரம், கிரிவரன் கூறுவதை அவரால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. பொய்யுரைக்க கிரிவரனுக்கு எந்த காரணமும் இல்லையே...! அதுவும் அருணாச்சலத்தை பற்றி அவர் ஏன் பொய் கூற போகிறார்?

"என்னுடைய மகன் தான் எனக்கு எல்லாமும். அவனோட வருத்தத்தை மட்டும் என்னால பொறுத்துக்கவே முடியாது. அவனுக்கு வருத்தத்தை கொடுக்கிறது யாராயிருந்தாலும் அதைப் பத்தி எல்லாம் நான் கவலைப்படவே மாட்டேன். தூக்கிப்போட்டு மிதிச்சுகிட்டு போய்கிட்டே இருப்பேன். உங்க பிள்ளை ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டான் சோனாச்சலம்..."

ஓடிச் சென்று கிரிவரனின் கரத்தை பற்றிக்கொண்டார் சோனாச்சலம்.

"சத்தியமா எனக்கு அதைப் பத்தி எதுவும் தெரியாது கிரிவரன் சார். அவன் ஏன் இப்படி செஞ்சான்னு எனக்கு தெரியல. நான் நிச்சயம் அவனை இத பத்தி கேட்கிறேன்"

கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️Where stories live. Discover now