46 அருணாச்சலத்தின் கோபம்

602 49 5
                                    

47 அருணாச்சலத்தின் கோபம்

அன்பு இல்லம் செல்லும் வழி முழுக்க அமைதி காத்தாள் மதுமிதா. ரிஷிவரன் தன் கண்களால், *ஏதும் பிரச்சனை இல்லையே?* என்று கேட்க, மெல்லிய புன்னகையை பதிலாய் தந்து மீண்டும் அமைதியை கையில் எடுத்தாள்.

அவர்கள் அனைவரும் அன்பு இல்லம் வந்து சேர்ந்து, உள்ளே நுழைந்தார்கள். அப்பொழுது கிரிவரனை அழைத்தாள் மதுமிதா.

"அங்கிள்..."

"என்னம்மா?" என்று அவளை நோக்கி திரும்பினார் கிரிவரன்.

"நீங்க எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க போறீங்களா?" என்றாள் தயக்கத்துடன்.

கிரிவரன், ரிஷிவரனின் பக்கம் தன் பார்வையை திருப்பினார்.

"நீங்க கூப்பிட்ட உடனே நான் உங்க கூட வந்துட்டேன். ஆனா அதுக்காக, எங்க அம்மா அப்பா இல்லாம நான் கல்யாணம் பண்ணிக்க தயாரா இருக்கேன்னு அர்த்தமில்ல"

"உன்னை ரிஷிக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்காக நான் உன்னை இங்கு கூட்டிகிட்டு வரல. நாங்க எந்த அளவுக்கு போவோம்னு அருணாச்சலம் தெரிஞ்சுக்கணும்னு தான் உன்னை இங்க கூட்டிகிட்டு வந்தேன். சூழ்நிலை கட்டாயப்படுத்தாத வரைக்கும், நாங்களும் உங்க அப்பா அம்மா இல்லாம உங்க கல்யாணத்தை நடத்த மாட்டோம். கவலைப்படாதே" என்று சிரித்தார் கிரிவரன்.

நிம்மதி அடைந்த மதுமிதா சரி என்று தலையசைத்தாள்.

"ரோகிணி, மதுமிதாவை கெஸ்ட் ரூமுக்கு கூட்டிக்கிட்டு போ" என்றார்.

சரி என்றுதலையசைத்த ரோகிணி, மதுமிதாவுடன் செல்ல விழையும் முன்,

"அவளை நான் கூட்டிகிட்டு போறேன்" என்றான் ரிஷிவரன்.

கிரிவரனும் ரோகிணியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"வா மது போகலாம்" என்றான் ரிஷிவரன்

"கெஸ்ட் ரூம் எங்க இருக்குன்னு எனக்கு தெரியும்" என்றாள் மதுமிதா.

ரிஷிவரன் தன் கண்களை சுருக்க, கிரிவரனும் ரோகிணியும் புன்னகைத்தார்கள்.

கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️Where stories live. Discover now