54 நிறைவு பகுதி

931 49 21
                                    

54 நிறைவுப் பகுதி

ரிஷிவரன் கூறியது போலவே அவர்களுடைய திருமணமும் முதலிரவும் அடுத்த நாளே முடிவானது.

சாம்பசிவமும் தாட்சாயனியும் அன்பு இல்லம் விட்டு கிளம்ப இருந்ததால், ரிஷிவரனையும் மதுமிதாவையும் தரைத்தளம் வருமாறு அழைத்தார் ரோகிணி.

"நாங்க நாளைக்கு காலையில வறோம்." என்றார் தாட்சாயணி.

"அம்மா, போன மாசம் எனக்கு ஒரு பட்டு புடவை வாங்கி கொடுத்தீங்கல்ல, அதை எடுத்துக்கிட்டு வாங்க. நான் நாளைக்கு அதையே கட்டிக்கிறேன்"

"இல்ல இல்ல... அது வேண்டாம்.  நான் உனக்கு புதுசா ஒன்னு வாங்கிட்டு வரேன்"

"அது எனக்கு ரொம்ப பிடிச்ச கலர் மா. எனக்கு அதையே கொண்டு வாங்க" என்றாள் கெஞ்சலாக.

"அவளுக்கு அது பிடிச்சிருந்தா, அதையே கொண்டு வாங்க ஆன்ட்டி" என்றான் ரிஷிவரன்.

சரி என்று அரை மனதாய் தலையசைத்தார் தாட்சாயினி.

"நாங்க கிளம்புறோம்ங்க. நிறைய வேலை இருக்கு"

"நீங்க எதுவும் செய்ய வேண்டாம். நாங்க எல்லாத்தையும் பார்த்துக்கிறோம். நீங்க கிளம்பி காலையில வந்தா போதும்" என்றார் ரோகிணி.

"ஆமாம் மா. வீட்ல தானே செய்றோம்? வேண்டியதை எல்லாம் ஐயரே கொண்டு வந்துடுவாரு. நம்ம ஒன்னும் கவலைப்பட வேண்டியதில்ல."  என்றார் கிரிவரன்.

சரி என்று தலையசைத்த தாட்சாயனி, சம்பசிவத்துடன் அங்கிருந்து கிளம்பி சென்றார்.

தன் இடுப்பில் கைவைத்துக்கொண்டு, ரிஷிவரனை பார்த்து கண்களை சுருக்கினார் ரோகிணி.

"என்ன மாம்? ஏன் என்னை அப்படி பாக்குறீங்க? நான் அப்படி என்ன செய்யக்கூடாததை செஞ்சிட்டேன்?" என்றான் கிண்டலாய்.

"ஆமா ஆமா, நீ என்ன செஞ்ச? நீ தான் ரொம்ப நல்லவனாச்சே..."

"ஆமா, நான் நல்லவன் தான். இல்லையா பின்னே?" என்று சிரித்தான் ரிஷிவரன்.

"நீ உன் மாமனார் மாமியார் கிட்ட பேசினதை பார்த்தா, உன்னை மாதிரி நல்லவன் உலகத்திலேயே இல்லன்னு சொல்லுவாங்க" என்று சிரித்தார் கிரிவரன்.

கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️Where stories live. Discover now