20 அம்மாவின் வழிகாட்டுதல்

776 56 6
                                    

20 அம்மாவின் வழிகாட்டுதல்

"நான் மதுமிதாவை காதலிக்கிறேன்" ரிஷிவரன் கூறியதும், கிரிவரன் பக்கம் தன் பார்வையை திருப்பி *நீங்கள் அவனிடம் ஏதாவது கூறினீர்களா?* என்பது போல் பார்த்தார் ரோகிணி. இல்லை என்று அவசரமாய் தலையசைத்தார் கிரிவரன்.

"நீ அவளை காதலிக்கிறேன்னா என்ன அர்த்தம்?" என்றார் ரோகிணி 

"காதலிக்கிறேன்னா, காதலிக்கிறேன்னு தான் அர்த்தம்"

"சரி, உன்னை பொறுத்த வரைக்கும், காதல்னா என்ன?"

பதில் கூறாமல் அமைதியாய் அவரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ரிஷிவரன்.

"என்னை தப்பா எடுத்துக்காதே குட்டி. காதலைப் பத்தின அபிப்பிராயம் ஒருத்தருக்கு ஒருத்தர் மாறுபடும். சில பேர், பொழுதுபோக்குக்காக காதலிப்பாங்க. சிலபேர் இன கவர்ச்சியால காதலிப்பாங்க. சில பேர் உயிரையும் கொடுப்பாங்க. இதுல உன்னோட காதல் எந்த வகையை சேர்ந்தது?"

"உங்க மேல நான் வைத்திருக்கிற அஃபக்ஷன் எந்த அளவுக்கு உண்மையோ, அதே மாதிரி தான் நான் மதுமேல வச்சிருக்குற அஃபெக்ஷனும். நீங்க இங்க வர்ற வரைக்கும், உங்களுடைய இடத்துக்கு அவ வரணும்னு நான் விரும்பினேன்... நம்ம குடும்பத்துலயும்... இந்த வீட்டிலயும்... எங்க மனசுலையும்..."

அவன் பதிலை கேட்டு புன்னகையுடன் நிமிர்ந்த அமர்ந்து, பெருமையுடன் ரோகிணியை ஏறிட்டார் கிரிவரன். ரோகிணியும் கூட அசந்து தான் போனார், ஆனால் அவர் காட்டிக் கொள்ளவில்லை.

"அப்புறம் எதுக்காக காத்திருக்க? நீ அவளை காதலிக்கிறேன்னு சொல்ல வேண்டியது தானே?"

"நான் சொல்லிட்டேன்"

"சொல்லிட்டியா? அவ உன்னை ஏத்துக்கிட்டாளா?"

இல்லை என்று தலையசைத்தான்.

"ஏன்? நீ நல்ல வசதியான பையன். பார்க்கவும் அழகா இருக்க. இன்னும் அவளுக்கு வேற என்ன வேணும்?"

"அவ என்ன தப்பா நினைச்சுகிட்டு இருக்கா"

"அவ உன்னை தப்பா நினைக்கிற அளவுக்கு நீ என்ன செஞ்ச?"

கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️Where stories live. Discover now