30 சவால்

733 50 5
                                    

30 சவால்

ரிஷிவரனின் புன்னகை துடைத்தெறியப்பட்டது, மதுமிதா கூறியதை கேட்டு. தேநீர் பருகுவதை நிறுத்திவிட்டு, அவளது முகத்தை ஆராய்ந்தான்.

என்ன அர்த்தத்தில் அவள் அப்படி கூறினாள்? அவனுக்கு அவள் எதையாவது புரிய வைக்கிறாளா? அவளை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று அவனுக்கு சவால் விடுகிறாளா அல்லது என்னை திருமணம் செய்து கொள் என்று கூறுகிறாளா?

அதைப்பற்றி கேட்க அவன் வாயெடுக்கும் முன், தாட்சாயணி வருவதை பார்த்து அமைதியானான். இனிப்பு போளிகளை தட்டில் வைத்து, எடுத்து வந்த அவர், அதை மதுமிதாவின் முன்னால் வைத்து எடுத்துக் கொள்ளுமாறு சைகை செய்தார். அங்கு ஒன்றுமே நடக்காதது போல் அவற்றை எடுத்து ருசிக்கத் தொடங்கினாள் மதுமிதா.

"எங்களுக்கு போளி ரொம்ப பிடிச்சிருக்குன்னு அம்மா கிட்ட சொல்லுங்க" என்றார் தாட்சாயினி.

"எங்க அம்மாவுடைய *தயாரிப்பு* எல்லாமே நல்லா இருக்கும்" என்றான் அவன் மதுமிதாவை பார்த்தபடி. அவன் *தன்னை* தான்  ரோகிணியின் தயாரிப்பு என்று பெருமையுடன் கூறிக் கொள்கிறான் என்று மதுமிதாவுக்கு புரிந்து இருந்தது. அவனும் அவருடைய தயாரிப்பு தானே...!

தாட்சாயணி சிரித்தபடி மதுமிதாவை பார்க்க, மதுமிதாவோ ரிஷிவரனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் தன்னைத்தானே சுட்டிக்காட்டி 'என்னைத்தான் கூறுகிறேன்' என்பது போல் சைகை செய்தான். அவள் *அப்படியா?* என்பது போல் தலையசைக்க, புன்னகைத்தான் ரிஷிவரன். அவளது மனம் மாறிக் கொண்டு வருவதை அவன் உணர்ந்தான். அப்படி என்றால், அவளும் அவனை மணக்க விரும்புவதாக தானே அர்த்தம்?

அவளை திருமணம் செய்து கொள்வது ஒன்றும், நடக்க முடியாத காரியம் அல்ல. அவனது அம்மாவிடம் கூறினால், அவனுக்காக அவர் பெண் கேட்க தயங்க போவதில்லை. ஆனால் ரோகிணிக்கு வேண்டியதோ, மதுமிதாவின் முழு சம்மதம். அப்படியிருக்க, அவன் ரோகிணியிடம் என்ன கூறுவான்?

கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️Where stories live. Discover now