18 அம்மாவின் நிலைப்பாடு

910 57 12
                                    

18 அம்மாவின் நிலைப்பாடு

ரோகிணியை பார்க்கவே தயங்கினான் ரிஷி. கிரிவரன் கூறியதை கேட்ட ரோகிணி திகைத்து தான் போனார். ஆனால் தன்னை சமாளித்துக் கொண்டு புன்னகை புரிந்தார்.

"நான் தான் சொன்னேனே அவனை நீங்க ரொம்ப நல்லா வளர்த்திருக்கீங்கன்னு..."

ரிஷியும் மதுமிதாவும் அவரை வியப்புடன் பார்த்தார்கள்.

"அவன் எவ்வளவு பொறுப்பான பிள்ளைன்னு இதிலிருந்து தெரியுது.  அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்காம போயிட்டா என்ன செய்றதுன்னு நீங்க ரெண்டாவது கல்யாணத்தை பத்தி யோசிச்சிருக்க மாட்டீங்க. நீங்க தனியா கஷ்டப்படுறதை பார்த்து, அவன் நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டா தேவலைன்னு நினைச்சிருப்பான். அப்படி தானே?"

அதை கேட்ட கிரிவரன் லேசாய் கைதட்டினார். ரிஷியோ, நம்ப முடியாமல் தன் அம்மாவை பார்த்துக் கொண்டிருந்தான் அவனது அம்மா இவ்வளவு நேர்மறையான எண்ணம் கொண்டவரா? மதுமிதாவும் கிட்டத்தட்ட அதே மனோ நிலையில் தான் இருந்தாள். ரோகிணி, ரிஷியிடம் கோபித்துக் கொள்வார் என்று எண்ணி இருந்தாள். ஆனால் அவரோ விஷயத்தை அழகாய் புரிந்து கொண்டு, சூழ்நிலையை இலகுவாக்கி விட்டார்.

"எனக்கு உங்க ரெண்டு பேரையும் பார்த்தா ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஒருத்தருக்கு ஒருத்தர் அணுசரணயா இருந்திருக்கீங்க..."

தன் மகனின் தோளை வாஞ்சையுடன் தட்டி கொடுத்தார் கிரிவரன்.

"டாட், நீங்க ஏன் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்க விரும்பலன்னு எனக்கு இப்ப தான் புரியுது.  உண்மையிலேயே, மாம் ரொம்ப ஆசம்"

"ஆமாம். மனுஷனோட மனசு இருக்கே, அது ரொம்ப வினோதமானது. எல்லாத்தையும் கம்பேர் பண்ணி பார்த்து, எது பெஸ்டோ, அதை தான் தனக்கு வேணும்னு விரும்பும். அப்படித்தான், என் பொண்டாட்டியோட இடத்தை யாராலும் பிடிக்க முடியாதுன்னு எனக்கே நல்லா தெரியும் போது, ரெண்டாவது கல்யாணத்தைப் பத்தி யோசிக்கிறதுல என்ன அர்த்தம் இருக்கு?"

கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️Where stories live. Discover now