42 கண்ணாமூச்சி

616 49 6
                                    

41 கண்ணாமூச்சி

இதற்கிடையில்,

சுதாகரும், ஜெயப்பிரகாஷும் மதுமிதாவின் வகுப்பறைக்கு வந்தார்கள். அவர்கள் மதுமிதாவை தேடினார்கள். அவள் வகுப்பறையில் இல்லாததால்,

"மதுமிதா எங்க?" என்றான் சுதாகர்.

"அவ இன்னிக்கி காலேஜுக்கு வரல" என்றான் ஒரு மாணவன்.

"ஆமாம், இன்னைக்கு அவ ஆப்சன்ட்" என்றாள் ஒரு மனைவி.

மதுமிதாவின் தோழிகள் ஒருவரை ஒருவர் அமைதியாய் பார்த்துக் கொண்டார்கள்.

சுதாகரும் ஜெயப்பிரகாஷும் அவர்கள் வகுப்பறையை விட்டு வெளியேறினார்கள்.

"அவ இன்னிக்கு காலேஜுக்கே வரலையாம்" என்றான் ஜெயப்பிரகாஷ்.

"இது சீட்டிங். அவ எப்படி இந்த மாதிரி செய்யலாம்? இன்னைக்கு நிச்சயம் காலேஜுக்கு வருவேன்னு தானே அவ சொல்லி இருந்தாளாம்? அப்புறம் எப்படி காலேஜை பங்க் அடிச்சா?"

"இப்போ நம்ம என்ன செய்யறது?என்றான் ஜெயபிரகாஷ்.

"ரிஷி என்ன செய்யப் போறானோ தெரியல"

"நிச்சயம் கோபப்படுவான்"

"அப்செட்டும் ஆவான்"

"மது இப்படி செஞ்சிருக்க கூடாது"

"அவ அவங்க அப்பா மாதிரி இல்லாம, நம்ம ரிஷிக்கு ஒரு சான்ஸ் கொடுத்திருக்கான்னு நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்"

"நம்ம அவங்க அப்பாவை குறை சொல்ல முடியாது. ஒரு அப்பாவா அவர் செய்யறது சரி தானே? எல்லா அப்பாவும் அப்படி தானே செய்வாங்க? மதுமிதாவை நெருங்க, நிச்சயம் நம்ம ரிஷி ஹார்ட் வொர்க் பண்ணியாகணும்"

"ஆமாம். அவன் கஷ்டப்பட்டு தன்னை நிரூபிச்சி தான் ஆகணும். இல்லனா, அவங்க அப்பா, நிச்சயம் அவன் இன்னும் கூட மத்த பொண்ணுங்க பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கான்னு தான் நினைப்பாரு" என்றான் சுதாகர்.

"எப்படி ரிஷி தன்னை ப்ரூஃப் பண்ண போறான்னு தெரியல. ஒருத்தனை கெட்டவன்னு நிரூபிக்கிறது ரொம்ப சுலபம். ஆனா நல்லவன்னு நிரூபிக்கிறது அப்படிப்பட்ட விஷயம் இல்ல"

கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️Where stories live. Discover now