21 மாற்றம்

796 63 5
                                    

21 மாற்றம்

"ரி....ஷி...." என்று இழுத்த பாலாவை பார்த்து புன்னகை புரிந்தான் ரிஷி.

"என்னடா இது கோலம்?" என்றான் ஜெயப்பிரகாஷ்.

பதில் கூறாமல் அதற்கும் புன்னகைத்தான் ரிஷி.

"இன்னைக்கு நீ பார்க்க ரேமண்ட்ஸ் மாடல் மாதிரி இருக்க" என்றான் சுதாகர்.

"ஆமாண்டா மச்சான்... இன்னைக்கு நம்ம மச்சான் கலக்குறான்" அவன் முதுகை தட்டி சிரித்தான் பாலா.

அப்பொழுது மதுமிதாவின் தோழி லலிதா, அவர்களது வகுப்பறையில் இருந்து  வெளியே வருவதை கவனித்தான் ரிஷி. ரிஷியை பார்த்து, விழி விரித்து, சிலை போல் நின்ற அவள் மீண்டும் வகுப்பறைக்குள் ஓடினாள். ரிஷிக்கு தெரியும், அவள் மதுமிதாவை அழைத்து வந்து, தன்னை பார்க்க செய்யப் போகிறாள் என்று.

"வாங்க கிளாசுக்கு போகலாம்" என்றான் ரிஷி.

"உன்னோட ரேமண்ட் லுக்கை உன்னோட ஆளுக்கு நீ காட்ட போறதில்லையா?" என்றான் பாலா கிண்டலாய்.

"வாயை மூடிக்கிட்டு வா போகலாம்" தன் வகுப்பறையை நோக்கி நடந்தான் ரிஷி.

அவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டு அவனை பின்தொடர்ந்தார்கள். ரிஷி அவர்களது வகுப்பில் நுழைந்தவுடன் அந்த வகுப்பறை நிசப்தமாகி போனது. அவனைக் கண்டவர்கள் வாயை பிளந்தார்கள். சில பெண்கள், அனிச்சையாய் அவர்களது இடத்தை விட்டு எழுந்து நின்றார்கள். அவர்களது பார்வைக்கு எந்த முக்கியத்துவமும் வழங்காமல், உள்ளே நுழைந்தான் ரிஷி. அவனது நண்பர்களும் தங்கள் இடங்களை ஆக்கிரமித்தார்கள். தன் இடத்தில் தனது பையை வைத்துவிட்டு வகுப்பறையை விட்டு மீண்டும் வெளியே வந்தான் ரிஷி. ஒரு மரத்தின் பின்னால் மறைந்து கொண்டு, அங்கிருந்து மதுமிதாவின் வகுப்பறையை நோட்டம் விட்டான்.

அவன் எதிர்பார்த்தபடியே, மதுமிதாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தாள் லலிதா.

"என்னடி, எதுக்காக என்னை இப்படி இழுத்துகிட்டு வர?" என்றாள் மது.

கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️Where stories live. Discover now