❤ 22 ❤

541 13 5
                                    

நீளாதோ நிமிடங்கள்
ஏங்கிடும் ஓசை என்னுள்..
நீண்டாலும் உன்னால்
உறையாதோ கணங்கள்..
நான் உன் விழியில்
தொலைவதும்..
நீ என் அருகில்
மறைவதும்..
தொடர் மாயமா இது..

சக்திக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. ஒரு வாரத்திற்கு முன் யாராவது வந்து இந்த காதல் உன்னை இந்த பாடு படுத்தும் என கூறியிருந்தால் வாட் த ஹெல் என கடுகடுத்துவிட்டு சென்றிருப்பான். ஆனால் இப்பொழுதோ நிலைமையே வேறு.. சாரு அறையில் இருந்து சென்று ஒரு மணிநேரம் கூட கடந்திடா நிலையில் அவளை மீண்டும் பார்க்க வேண்டும் என இதயம் அடித்துக்கொண்டே இருந்தது.
தான் நினைத்தால் முடியும் தான் எழுந்து அவள் இருக்கும் இடமே சென்று பார்த்து விடலாம். ஆனால் இது எதுவும் அவனிற்கு பழக்கம் இல்லையே. காலை ஆபிஸ் அறைக்குள் வந்தால் மாலை தான் வெளியில் வருபவன்.. மதிய நேர உணவு கூட அறைக்கு தான் வரும். தனக்கு அன்று இனித்த தனிமை இன்று வதைத்துக்கொண்டிருந்தது அவனை. இதற்கு மேல் முடியாது என எழுந்து கொண்டான். எழுந்து அறையை திறந்தவன் முன் அழையாமளே வந்து நின்றிருந்தான் டேவிட்.

"இவன் ஒருத்தன் கூப்பிட்டா வர மாட்டான் கூப்பிடாத நேரம் வந்து நின்னுட்டு இருக்கது..." முணுமுணுத்துக்கொண்டு சக்தி கஷ்டப்பட்டு அவனிடம் ஒரு புன்னகையை அளித்துவிட்டு சுற்றுக்கொண்டு நகர முயல

"சார் சார்..நீங்க எங்க போறீங்க..எதுக்கு நான் இருக்கன்.. சொல்லுங்க என்ன வேணும்.." டேவிட் கதவில் கையை வைத்து அவன் வழியை மறைத்து அவனை இந்த நேரம் வெளியே விடுவது என்னவோ பாவம் என்ற வகையில் முகத்தை சீரியசாக வைத்து நின்றிருந்தான்.

"இல்ல டேவிட் நான் பார்த்துக்குறேன்.." சக்தி மீண்டும் முன்னே செல்ல நகர டேவிட் விடுவதாக இல்லை. கோபம் வந்தாலும் எதை சொல்லி காட்டுவது என பொறுமையாய் அவனை பார்த்து.."போய் ப்ரைட் ரைஸ் வாங்கிட்டு வாங்க.. அதுவும் இப்போவே எல்லாம் கட் பன்னி இப்போவே பன்னி ப்ரஷ்ஷா வேணும் அன்ட் சூடா இருக்கனும்.." சக்தி கூற டேவிட்டும் தலையை ஆட்டி விட்டு நகர்ந்தான்.

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Waar verhalen tot leven komen. Ontdek het nu