❤ 37 ❤

5.6K 239 130
                                    

உனக்கென
உனதாய்..
என்னை எனதென
மறந்தே..
தந்தேன் உன்னிடம்..
உரிமையாய் ஆனேன்
உனதாய்..

காலை வந்ததும் அறையினுள் சென்றவன் தான் இதுவரை வெளியில் வரவில்லை. கேட்க யாரும் துணியவும் இல்லை. அவன் கோபம் கண்டவர்கள் ஆயிற்றே.

சாருவோ சீரியசாக ஹால் சோபாவில் அமர்ந்து நகத்தை கடித்துத்துப்பிக்கொண்டிருந்தாள். மனதில் கோபம் அலைமோதிக்கொண்டிருந்தது. கேள்விகள் சக்தியிடம் கேட்க வழியின்றி ஒரு பக்கம் குடைந்து கொண்டிருந்தன. ஆனால் ஊரில் அவள் நினைத்ததற்கு மாறாக தான் அனைத்தும் நடந்தது. ஊரினுள் சென்றதுமெ கனவிலும் நினைத்திடா அளவு அமோக வரவேற்பு..காரணம் தன் அம்மாவும் அப்பாவும் தான் என அறிந்தவளுக்கோ ஒன்றுமே புரியவில்லை. இவளுக்கு மேலாக சக்திக்கு குழப்பமும் அதிர்ச்சியும் தான்.

அப்போதே தன் வீடு செல்ல வேண்டும் என கார் வர சொல்லி வந்திருந்தான். அங்கு வைத்தே சக்தியை அடிக்க வேண்டும் என்ற கோபம் சாருவிற்கு ஆனால் அவளது பெற்றோர் சந்தோஷம் கண்டதும் அந்த எண்ணத்தை கொஞ்சம் தள்ளி வைத்துக்கொண்டாள். வரும் போது அவள் தாய் கூறிய வார்த்தைகள் வேறு புரியாத புதிராகவே இருந்தது.

"இனி உன் பாதுகாப்பு உன்ன பத்தின கவல இல்லாம நாங்க இருப்போம் பாப்பா.."

எதிலிருந்து அவளிற்கு பாதுகாப்பு..அவளை கடத்திய விடயங்கள் எதுவும் அவர்கள் அறியாதது அப்படி இருந்தும் அவர் அப்படி கூறுகிறார் என்றால் என்னவாக இருக்கும். யோசிக்க மட்டுமே முடிந்தது அவளால்.

இங்கு வந்ததும் அதுவும் நினைத்ததற்கு தலைகீழ் தான். ஆரத்தி எடுத்தது முதல் இவளை தலையில் வைத்து தான் கொண்டாடினார்கள் எல்லோரும். அதிலும் நிலாவுக்கும் சதீஷுக்கும் தான் சந்தோஷம் தாங்கவில்லை.
இதையெல்லாம் பார்த்தவன் தன் அறைக்கதவை அறைந்து சாத்தியது தான் இதோ இதுவரை அவனைப்போலவே அந்த கதவும் ஒரு அசைவும் இல்லை.

"சாரும்மா.." சாவித்ரியின் அழைப்பில் தன் சிந்தனை கலைந்து நிமிர்ந்தாள் சாரு.

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Where stories live. Discover now