❤ 26 ❤

5.4K 255 167
                                    

முடிவற்ற மாயங்களின்
மாயவள் நீ என்றாய்..
முடிவென என்னில்
விலகிட ஏனோ சென்றாய்..
ஒரு வரம் கொடு போதும்
மாயவள் உன்னை
ஏந்திடுவேன்
முப்பொழுதும்..❤

சக்திக்கு வந்த அழைப்பில் கேட்ட செய்தியில் ஆடிப்போய் இருந்தான் அவன். பார்வை பாதையில் இருக்க கைகள் காரை கட்டுப்பாட்டில் வைத்திருக்க இருந்தும் சக்தியின் மனம் அடித்துக்கொண்டு தான் இருந்தது. வினோதிற்கு என்ன என்று புரியாவிட்டாலும் சக்தி வாகனத்தை ஓட்டும் விதத்தில் என்ன என்று கேட்கவும் முடியாமல் அமர்ந்திருந்தான்.

போகும் வழியில் ஓர் இடத்தில் பாதையில் வாகனங்கள் எல்லாம் நிற்க..பலமாய் ஹார்ன் அடித்தவன் அங்கிருந்த ஒருவரை அழைத்து என்ன என்று கேட்டான்.

"அந்த பள்ளத்துல ஒரு விபத்துல வண்டி விழுந்திரிச்சி தம்பி.. நல்ல வேள பொண்ண காப்பாத்திட்டாங்க.. ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிருக்காங்க." என்று விட்டு நகர்ந்தான். நல்லவேளை என சக்தி நினைக்க வினோதும் ஆச்சரியமாய் தலையை நீட்டி பார்த்தான் அப்பெரிய பள்ளத்தை.

ஒருவாரு வாகனங்கள் நகரத்தொடங்க இவர்களும் அடுத்த அரைமணிநேரத்தில் வந்தடைந்தனர் ஹாஸ்பிடலை. இங்கு எதுக்கு என்று விழித்துக்கொண்டே சக்தியின் பின்னால் நடந்தான் வினோத்.

அங்கு வரவேற்பில் இருந்த பெண்ணிடம் சென்ற சக்தி... ரம்யா அல்லது வினிதா என்ற பெயரில் யாரும் அட்மிட் ஆகி இருப்பதாக கேட்டான்.. கணினியில் தட்டி விட்டு திரும்பியவள்..
" ஆமா சார் ரம்யா ன்னு அட்மிட் பன்னி இருந்தாங்க..ஆனால் இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி தான் அவங்க அம்மா வந்து டிஸ்ச்சார்ஜ் பன்னி கூட்டிட்டு போனாங்க."அவள் கூறியதில் சக்தி செய்வதறியாது இருக்க இவன் கேட்டது புரியாது வினோத் மெதுவாக சார் என்றான்.

அப்போதுதான் வினோத்திடம் கூறவில்லை என நினைவு வந்தவனாக.."வினோத் ரம்யாக்கு எக்ஸிடன்ட்னு கால் வந்தது.. ஆனால் அதுக்கு முன்னாடி அவங்க அம்மாக்கு தகவல் சொல்லி கூட்டிட்டு போய்ட்டாங்க போல.." என்றான் பார்வையை அங்கும் இங்கும் அலைய விட்டபடி.
அவனை ஜீரணிக்கவே சில நேரம் எடுத்துக்கொண்ட வினோத் சட்டென.."அப்போ சாரு.." என்றான்..

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Where stories live. Discover now