❤ 59 ❤

3.8K 154 15
                                    

என் ஜீவன் ஜீவன்
நீதானே..
என தோன்றும்
நேரம் இதுதானே...
நீ இல்லை இல்லை
என்றாலே..
என் நெஞ்சம் நெஞ்சம்
தாங்காதே..

"அக்கா போதும்கா.." பதட்டமாய் ஒரு குரல் ஒலிக்கவும் என்ன என்று எட்டி பார்த்தான் சதீஷ்.

"பத்தாதுடி இன்னும் நல்லா கலக்கு..அள்ளி அள்ளி போடு..எரிஞ்சி சாவட்டும்.." அங்கு அனிதா தான் அவளை விட எப்படியும் வயது குறைவாக இருந்த இன்னொருத்தியிடம் ஏவிக்கொண்டிருக்க அவள் இன்னும் மிளகாய்த்தூளை அள்ளி போட்டு ஒரு பக்கெட்டில் தண்ணீரில் கலக்கிக்கொண்டிருந்தாள்.

வெகுநாள் கழித்து தன்னவளைக்கண்ட சதீஷ் தன்னிலை மறந்து பார்த்துக்கொண்டிருக்க பின் தாமதமாய் தான் கருத்தில் பதிந்தது அந்த மிளகாய் பக்கெட்.

பாவம் யாரு பெத்த புள்ளைக்கோ இந்த சோதனை என எண்ணிய சதீஷ் தொண்டையை செறுமினான். விழுந்தடித்துக்கொண்டு பக்கட்டை மறைத்தவாறு அதன் முன் நின்று சதீஷை பார்த்தாள் அனிதா.

"பயந்தே போய்ட்டேன்.. நீங்க தான.. சரி என்ன இந்த பக்கம்.." கூலாக கேட்டாள் அனிதா.

"ஆஹ் காலார நடந்துட்டு போகலாம்ன்னு வீட்டுல இருந்து நடந்து வந்தேன்.. சரி அது இருக்கட்டும் அந்த மிளகாய் யாருக்கு. ?"

"உஷ்ஷ்ஷ்.. சத்தம் போடாதீங்க.. உங்களுக்கு தெரியாது? இன்னக்கி பட்டணத்துல இருந்து என்ன பொண்ணு பார்க்க வாரங்க.." என அவள் கூற.."ஓஹ்.. " கதை நடத்திய சதீஷ் பின்தான் அவள் கூறியது புரிய.."ஏஹ்... அதுக்கூகூ.." என்றான் அடுத்த பதிலை எதிர்பார்த்தே.

"என்ன தைரியம் இருந்தா என்ன பொண்ணு கேட்டு அந்த ராஸ்கல் வருவான்.. நான் லாயராக வேணாமா..அவன் வந்ததும் கழுத்த நீட்டிடனுமா.. அதான் அவனே வேணாம்ன்னு சொல்லிட்டு ஓடுறதுக்கு தான் இந்த திட்டம்.."
அனிதா கண்களில் வெறியுடன் கூறி முடிக்க சதீஷோ வயிறு கலங்க அங்கிருந்த மிளகாய் தண்ணீரையே பார்த்துக்கொண்டிருந்தான். பொதுவா நாமதான இப்படி திட்டம் போடுவோம் அதுவும் மிளகாய் அளவுக்கு போனதில்லையே.

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Where stories live. Discover now