❤ 10 ❤

5.6K 228 66
                                    

❤உன் அழகிய விழி
சிமிட்டலில்
ஓர் நிமிடம்
என் உலகம் தான்
சுற்றுதல்
மறந்ததடி❤

முதல் முறையாக தன் பெற்றோர் இன்றி தனிமை என்ற ஒன்றை உணர்ந்தாள் சாரு. தன் வீட்டையே உள்ளடக்கி விடும் அளவு பெரிய அறை.. பிறந்தது முதல் பாயில் படுத்தவளுக்கு பத்து பேர் உறங்கிடும் அளவு பெரிய கட்டில்.. இப்படி பல அவள் கண்டிரா வசதிகளும் அவளுடன் கைகோர்த்திருக்க இருந்துமே எல்லாமே கசந்தது அவளுக்கு தன் பெற்றோர் இன்றி. எல்லாவற்றிற்கும் மேலாக ஏதோ பெரிய இரைச்சல் ஒலி அது என்ன என்று இணங்காண முடியாது அவளை பயத்தில் ஆழ்த்தியது.

உருண்டு உருண்டு பார்த்தவள் உறக்கம் வராது போகவே மெல்ல எழுந்து அறையிலிருந்து வெளியே வந்தாள். யாரிடமாவது கேட்கலாமா என சிந்திக்க ஆனால் வீடே இருளில் ஆழ்ந்து இருக்க அனைவரும் தூங்கி இருந்தனர். மெதுவாக படிக்கட்டு வழியே கீழிறங்கினாள் சாரு. அங்கு சாப்பாட்டு அறையில் விளக்கு எறிந்து கொண்டிருக்க..சமயலறையை எட்டிப்பார்த்தாள் சாரு.

அங்கு பாத்திரங்களை உருட்டிக்கொண்டிருந்த சதீஷைக்கண்டவள்..
என்னவென்று அழைப்பது என புரியாது அங்கிருந்த கதவில் மெதுவாய் ஒரு முறை தட்ட..

சத்தத்தை கேட்டு திடுகிட்ட சதீஷ் திரும்பாதே "அண்ணா நிலா க்ளாஸ் முடிச்சிட்டு லேட்டா வந்தா..சாப்பாடு ரூம்ல சாப்பிட்டா அப்புறம் தூங்க போயாச்சி.." என படபட என கூறிவிட்டு திரும்பிப்பார்க்க..அங்கு கண்களை அகல விரித்து மேலேயும் கீழேயும் பார்த்து விழித்துக்கொண்டிருந்தாள் சாரு.

அவளை பார்த்த சதீஷ் "நம்ம நிலம இப்படி ஆகிரிச்சே ச்சீ.." என தலையிலே அடித்துக்கொண்டு மீண்டும் அவள் பக்கமாய் திரும்பி "நீ தான் சாருவா?" என கேட்க ஆம் என் தலையசைத்தாள் அவள்.

சட்டென முகத்தில் ஒட்டிக்கொண்ட சிரிப்போடு "இன்னக்கி கம்பனில புல்லா உன்ன பற்றி தான் பேச்சு அதோட ஹெட்லைனும் நீ தான்" என்றான்.

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Where stories live. Discover now