❤ 31 ❤

5.3K 244 93
                                    

கலையாத உன் பிம்பம்
கண்ணோரமாய்
இன்றும்..
கலையாமல்
ஏந்திச்செல்கிறேன்
எங்கும்...❤

ரயில் பயணம் மனதிற்கு மிகவுமே இதமாக இருந்தது சக்திக்கு. எப்போதும் விரும்பியது தான் ஆனால் இதுவரை சென்றிட தோன்றிடவில்லை..தன்னவள் நினைவுகளுடன் ஜன்னலோர இருக்கை அதிலும் மாலை நேர தென்றல் காற்று இதமாய் மனக்காயம் வருடிட வெளியில் பார்த்துக்கொண்டிருந்தான்.

புகையிரதம் நகரத்தொடங்கி சில கணங்களில் தன்னெதிரே காலியாக இருந்த சீட்டை அடித்துப்பிடித்துக்கொண்டு வந்து அடைத்தது ஓர் பெரிய உருவம். ஜன்னலோர பக்கம் அவள் முதலில் அமர்ந்து தன் உருவத்திற்கு வசதியாய் இடத்தை சரி செய்து கொண்டு.."என்ன வெத்தல பாக்கு வச்சி அழச்சாதான் வருவியோ சீக்கணம் வந்து இப்படி உக்காரு.." உருவத்திற்கு ஏற்றது போன்ற குரலிலே ஏவினாள் யாரையோ பார்த்து. யார் என சக்தி அங்கே திரும்பிப்பார்க்க.. அமைதியே உருவாய் புடவையின் துப்பட்டாவால் முகத்தை முழுதாக மறைத்துக்கொண்டு தயங்கித்தயங்கி அவளருகில் வந்து அமர்ந்தாள் ஒரு இளம் பெண்.

அவர்களுடனே அடியாட்கள் போன்று தோற்றமளித்த இருவர், ஏறி இவர்கள் அமர்ந்திருந்த சீட்டிற்கு பின்னால் சீட்டில் அமர்ந்து கொண்டனர்.

அவளுக்கோ மனம் இருவிதமாய் இருந்தது. வரும் போது பேசிய பேச்சுக்களை வைத்து ஏதோ திட்டம் என அறிந்தாள். இங்கு இவனை கண்டதும் அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இவன் தான் இருப்பானோ என மனம் மீண்டும் ஒரு கேள்வியை தூக்கிவிட.. உதவி கேட்டு தப்பிக்கலாம் என்ற எண்ணம் குறைந்து விட்டது.

சக்தி ஜன்னல்புறம் திரும்பிட பெரியவளின் பார்வை அவசர அவசரமாக சக்தியை மொய்த்து எடை போட்டது.

இவனோ கண்டும் காணதது போல அமர்ந்து விட அவளே.."சார்.." என்றாள்.

இவன் என்ன என்று கேட்கவும் விழித்து விட்டு "இல்ல இது **** ஊர் போற ரயில் தான..?" என்றாள். ஏனோ சக்திக்கு அவளைப்பார்த்ததுமே பிடிக்கவில்லை வெள்ளை நிறமே மறந்து போயிருந்த சிவப்பு நிற சாயம் படிந்த பற்களை அவள் மீண்டும் காட்டி சிரிக்க..அவள் அந்த அப்பாவி பெண்ணை ஏவியதும் வேறு சக்தியை எரிச்சலூட்டியிருக்க.." ஏன் பார்த்து டிக்கட் எடுக்கலயோ.." என்றான் எரிச்சலாய்.

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Where stories live. Discover now