❤ 40 ❤

5.6K 224 113
                                    

ஒரு பனிபோல்
உந்தன் நினைவு
என் மனதில்
வந்து இறங்கியதே
உன் அருகே
எந்தன் இதயம்
சிறு மெழுகாய் மெல்ல
உருகியதே..

தனக்கு பின்னால் ஒலித்த குரலில் சிலையென
திரும்பாது அப்படியே நின்று கொண்டிருந்தாள் ராஜம்மாள்.

அவளருகில் வந்த ரம்யா.."ஆன்ட்டி நீங்க பொண்ணு வீட்டு பக்கம் தான..ஏன் உள்ளேயே வராம அங்கயே நிக்கிறீங்க..வாங்க எல்லாருக்கும் காபி எடுத்து வச்சிருக்கேன்." அவள் கூறி முடிக்கவும் தான் மூச்சே திரும்பி வர இதோ என்றவாறு அறக்கப்பரக்க வீட்டினுள் ஓடினாள் ராஜம்மாள்.

இவர் நார்மலா இல்லயே எதற்கு இவ்வளோ பதட்டம் என சிந்தித்தவண்ணம் உள்ளே வினோவை தேடி சென்றாள் ரம்யா.

அங்கு சோபாவில் அமர்ந்து யாருனோ போனில் கதைத்துக்கொண்டிருந்தான் வினோத். ரம்யா அருகில் சென்றமர்ந்து கொள்ளவும் அவள் கையுடன் தன் கையை பிணைத்துக்கொண்டே போனில் பேசிக்கொண்டிருந்தான்.

போன் பேசி முடித்து விட்டு அவள் பக்கம் திரும்பியவன் அவள் ஏதோ சிந்தனையில் இருப்பதைக்கண்டு அருகில் சென்று அவள் முகத்தில் தவழ்ந்து கொண்டிருந்த ஒற்றை முடியை ஊதினான். சட்டென அவன் பக்கம் திரும்பியவள் கண்டு புன்னகைத்த வினோ என்ன என்றான்.

"வினோ சாருவ கடத்தினது பத்தி எதாவது தகவல் கிடைச்சிதா? "

அவள் கேட்க பதிலுக்கு இல்லை என தலையை ஆட்டினான்.

"ப்ச்..என்ன செய்யுறது அவள எதுக்கு கடத்தினாங்க என்று ஒன்னுமே புரியாம இந்த விஷயத்த எப்படி சும்மா விட்றது.. அவள் நார்மல் ஒரு பெண்ணா இருந்தா பயப்படவே தேவையில்ல..ஆனா அவ ரொம்பவே innocent வினோ..சக்தி வேற இந்த பிரச்சனை நடுவுல தாலிய வேற கட்டி கூட்டிட்டு வந்துட்டான். அவன் தான் இந்த விஷயத்துல என்ன நடந்தது என்று விசாரிக்கனும்.. அவனும் சாருவ விட மோசமாவல்ல இருக்கான். இது ரெண்டையும் வச்சிகிட்டு.." ரம்யா கோபத்தில் பொரிந்து கொண்டே இருக்க வினோவோ கூலாக அவள் காதோர முடிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தான்.

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Where stories live. Discover now