❤ 21 ❤

5.4K 257 150
                                    

❤இருதயம்
துடிக்கவில்லையடி
உனை கண்ட நொடி..
மறந்துதான் போனதோ
துடிப்பையும்..
ரகசியமாய்
தவிக்கிறேன்
மாயவள் உன்னால்..❤

என்றுமில்லா முகமலர்ச்சியுடன் அம்மா என்று வந்தவனை பார்க்க சாவித்ரிக்கோ சந்தோஷம் தாங்கவில்லை..காரணம் அறியாவிட்டாலும் அவனது முகமலர்ச்சியை பார்க்கவே போதுமானதாக இருந்தது அவரிற்கு.

"வா சக்தி.. இரு காபி தாரன்.." அவர் சொல்லிவிட்டு சமயலறைக்குள் நுழைய மேசையில் சமயலறைக்கு பக்கமாய் போட்டிருந்த கதிரையில் சென்றமர்ந்தான் சக்தி.

முழித்துக்கொண்டே அவன் எங்கே இருப்பானோ என்று படியிறங்கி வந்த சாரு இவனைக்கண்டு விட மெதுவாய் பின்னால் பதுங்கி பதுங்கி வந்து சமயலறைக்குள் நுழைய முயல இவள் பதுங்கி வந்ததை முன்னால் இருந்த கண்ணாடியூடு பார்த்துக்கொண்டிருந்த சக்தி அவள் கடக்கப்போகும் நொடி சரியாகப்பற்றினான்.

முன்னால் திரும்பி அமர்ந்தவாறே சரியாக பின்னால் கை நீட்டி தன் கை பற்றிய சக்தியையே திகைத்து நோக்கினாள் சாரு.

மெதுவாய் இவள் பக்கம் திரும்பியவன்.." ஆமா எதுக்கு இப்பிடி பதுங்கி பதுங்கி வர்ர? " என்று கேட்க மேலும் கீழுமாய் கண்ணை உருட்டியவள்.." அது அது..அது இருக்கட்டும் நீங்க எதுக்கு  என் கைய கைய பிடிக்கிறீங்க?" திரும்பி சாரு கேட்டாள்.

அவளை ஆழ நோக்கியவன் தன் பற்றிய கையாலயே அவள் கை மணிக்கட்டை மெதுவாய் வருடிக்கொண்டே "சும்மா தான்.." என்றான்.. இவளோ என்றும் இரும்பிப்பிடி பற்றும் சக்தி இன்று பற்றியிருக்கும் விதம் ஏதோ உணரச்செய்ய அவன் கைப்பிடியில் இருந்த தன் கையை மறு கையால் விலக்க முயன்று கொண்டே அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

வழமை போலவே நிலாவும் சதீஷும் இங்கு நடப்பதைக்கண்டு வாய் பிளந்து பார்த்துக்கொண்டு இருந்தனர் படிக்கட்டு இடை வழியே.

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Where stories live. Discover now