❤ 39 ❤

5.7K 234 104
                                    

மாயமாய் கரைகிறேன்
உன்னருகில் தினம்..
உனை விலகிட
மறுப்பதும்..
உனை நெருங்கிட
வதைப்பதும்..
எதுவென அறியாமல்..

காலையில் சூரியன் வரவிற்கு முன்னமே முந்திக்கொண்டு வந்து நின்றது வீட்டு வாசலில் ஒரு பஸ்.

"ம்மா அவங்க வந்துட்டாங்க.." நிலா அனைவரையும் கிளப்பிக்கொண்டு வாசலிற்கு வர அவளை தொடர்ந்து

சாவித்ரி சதீஷ் மற்றும் சில நெருங்கிய சொந்தங்களும் வெளியில் வந்து பார்க்க பஸ்ஸினுள் ஏதோ சலசலப்பு தெரிந்தது ஆனால் பஸ் கதவோ திறந்தபாடில்லை.

"அட சண்ட போடாதீங்கபா.." உள்ளே கூவி விட்டு.."சார் நீங்க ஒன்னும் நினைக்கலன்னா கொஞ்சம் கதவ திறந்து விடுறீங்களா.. ?" பஸ் ஓட்டுனர் குரல் மட்டும் கேட்டது. கூடவே பேசுவது நான் தான் என்பதை அறியத்தருவதற்கு போல் கையை வெளியில் பஸ்ஸிற்கு மேலாக தூக்கி காட்டினார்.

"சதீஷ் போய் கொஞ்சம் கதவ திறந்து விடுப்பா.." சாவித்ரி கூற சரிம்மா என்றவாறு முன்னால் சென்று கதவை வெளியில் திறந்தான் சதீஷ்.

ஒரு பஸ்ஸும் போதாது என்பது போல் கதவு திறந்ததுமே உருண்டு பிரண்டு தள்ளிக்கொண்டு ஒவ்வொருவராய் வந்திறங்க.. இன்னும் எவ்வளோ வருது என சதீஷ் உள்ளே எட்டிப் பார்க்க அவன் சற்றும் எதிர்பாராத விதமாய் பஸ் படியில் இருந்து வெளியில் வந்து யாரோ விழ சட்டென கைகளில் தாங்கிக்கொண்டான் அவன்.

நல்லவேள என எண்ணிக்கொண்டு இவன் நிமிர்த்தி நிற்க வைக்க..அங்கு

"ஏலே பார்த்து திறக்க வேணா..இப்படி திறக்கிறீம்..இன்னும் கொஞ்சம் தவறிருந்தா அந்த வசு சில்லுல என் தல நசுங்கி இருக்காது..." என்று ஒரு பெண் பொரிந்து கொண்டு இருந்தாள்..

"நான் கதவ திறந்தது எப்போ இவ வந்து விழுந்தது எப்போ..அதுவும் இல்லாம பிடிச்சதுக்கு தாங்ஸ் சொல்லாம இப்படி திட்டுறா.. " எண்ணிக்கொண்டு அவன் குழம்பியவண்ணம்.."இல்ல நீங்க தப்பா புரிஞ்சிட்டீங்க இங்க கீழ.." என அவளிடம் விளக்கலாம் என ஒரு முறை குனிந்து விட்டு நிமிர அங்கு ஒரு வயதான பாட்டி தான் "கீழ என்னப்பா.." என இவனை ஏதோ வேற்றுக்கிரகவாசியை பார்ப்பது போல் பார்த்துக்கொண்டிருந்தார். இவரையா பிடிச்சோம் நாம.. கூர்ந்து பார்த்த சதீஷ்.. இல்லையே என அவளை தேட.. அவள் வீட்டை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தாள்.

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Where stories live. Discover now